பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼あ認 வாய்மொழியும் வாசகமும் விசிட்டாத்வைதம் என்பது ஒரு விசேடத்துடன் கூடிய அத்வைதம். கடவுள் ஒருவர்தான் உண்டு. அவருக்கு உடலாயிருப்பது இந்த லகம். அந்த உடலில் உயிர்த் தத்துவங்களாக இருப்பது சீவன். பரமான்மாவைப் பூரணன் என்றும் அதில் தன்னை ஒரு கூறு என்றும் சீவன் சுவாதுபவத்தில் அறிந்து கொள்ளுதல் முக்தி. அதற்குச் சீவன் பரமான்மாவிடத்தில் பரபக்தி செய்ய வேண்டும். அவர் அருளால் சீவன் தன்னை அவருடைய ஒர் உறுப்பு என்று அறிந்திருப்பது முக்தி. அத்வைதம் என்பதற்கு இரண்டற்றது என்பது பொருள். உலகம், சிவன் என்று சொல்லுபவை வேறு. பரம்பொருள் வேறு அல்ல; உள்ளது ஒரு பொருளே. அஃது அகண்ட சத்சித் ஆனந்தம். தன்னை உலகமாகவும் சீவனாக வும் காட்டிக்கொள்ளுகின்ற வ ல் ல ைம அப்பரம் பொருளிடத்து உண்டு. ஆந்த வல்லமைக்கு மாயாசக்தி என்று பெயர். பிரம்மமும் பிரம்மத்தினுடைய சக்தியும் இரண்டல்ல. சீவனிடத்துள்ள அஞ்ஞானத்தால் உலகம் என்றும் சிவன் என்றும் பேதம் அவனுக்குத்தோன்றுகின்றது. பிரம்ம ஞானத்தில் பிரம்மம் ஒன்றே யாண்டும் உள்ளது. ஆறு ஆழியில் கலப்பது போன்று சீவன் பரத்தில் கலக் கின்றான். இஃது அத்வைதம் கூறும் முக்தி. சாத்திரங்களில் இந்த மூன்று நிலைகளும் இடம் பெறு கின்றன. மனிதனுடைய வாழ்க்கையிலும் இந்த மூன்று. நிலைகளும் அதனதன் இடத்தைப் பெறுகின்றன. மனிதன் விழித்திருந்து வியவகாரம் பண்ணுவது துவைத நிலை. ஆங்கு தான் வேறு, மற்ற உயிர்கள் வேறு, உலகம் வேறு நிலை. பிறகு கனவு காண்கின்றான். கனவில் தென்படும் மனித்ர் களும் உலகமும், அவனுடைய மனத்திற்கு வேறுபட்டவை: அல்ல. பேதம் போன்று தென்பட்டுக் கொண்டிருக்கும் அபேதநிலை அது. விசிட்டாத்வைத நிலையை இது நன்கு விளக்குகின்றது. பிறகு கனவு அற்ற ஆழ்ந்த உறக்க நிலை.