பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15ళ్ల வாய்மொழியும் வாசகமும் கள் வளர்ச்சிக்குத் தடையாக அமைகின்றன. கீதையின் ஏழுமுதல் பன்னிரண்டு இயல்கள் முடிய கடவுள் சொரூபத்தை விளக்குவதோடு பக்தியையும் அப்பகுதி வளர் கின்றது. உணர்ச்சிகளின் திரள் பக்தி. இஃது அன்பு ஊற்றெடுக்கக் காரணமாகயிருக்கின்றது. அன்புடைய உயிர் தெய்வத்தினிடம் கவின் பெறுகின்றது. அன்பே கடவுள் என்பது கோட்பாடு. அன்பில் இனிமை மிளிர, அஃது ஆனந்தமாகப் பரிணமிக்கின்றது. அஃது உவப்பிலா ஆனந்தமாகின்றது. ஆனந்தமே பிரம்மம். பரமான்மாவின் சொரூபம் ஆனந்தம் . இந்த ஆனந்தத்தை நாடியே உயிர் கள் வாழ்க்கையில் பற்று வைக்கின்றன. ஆனந்தம் இல்லை யேல் உயிர்கள் கணப்பொழுதும் வாழா. ஆக, ஆனந்தம் என்னும் ஆன்ம சொரூபத்தை வளர்ப்பது கீதையின் இரண்டாவது ஷட்கம். சேதநப்பொருளுக்கு இருக்கின்றேன்’ என்ற அறிவு உண்டு. சடப்பொருளுக்கு (அசேதநத்திற்கு) அந்த அறிவு இல்லை. சீவன் உயிரோடிருக்கின்றான் என்பதற்கு அவனது அறிவே பிரதானம். அறியும் தன்மையில் ஏற்றத் தாழ்வு உண்டு. பேருயிர்கள் நன்கு அறிகின்றன. சிற்றுயிர்கள் மங்கிய அறிவுடையன. அறிவு இல்லாத உயிர் இல்லை. அறிவை வளர்ப்பது வாழ்வின் நோக்கம். ஞானத்தை வளர்ப்பதற்கான வழிகளை கீதையின் பதின்மூன்றாவது இயல் முதல் பதினெட்டாவது இயல் முடியக் காண் கின்றோம். அந்தக்கரண சுத்தி பண்ணுவதற்கான வழிகள் ஞான வாழ்க்கையில் காட்டப்பெற்றுள்ளன. சடம்போல் தென்படும் சீவனை இந்நெறி சித் சொரூபமாகத் திருத்தி யமைக்கின்றது. ஆன்மா சோதி மயம் என்பது கோட்பாடு. ஆகவே சத் சித் ஆனந்தமாகிய பரசொரூபத்தின்கண் சீவனை நடத்திச் செல்லுதல் கீதையின் திட்டமாக அமைகின்றது. பேருரைகள் : பிரஸ்தான திரயத்தில் அதிக எண்ணிக் கையில் பேருரை பெற்றது. பகவத் கீதையே பேருரையாளர்