பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை மறைமுடியின் சாரம் 露5務 களில் பெரும்பான்மையோர் சமய அடிப்படையிலேயே உரைகள் இயற்றியுள்ளனர். அத்வைத சம்பிரதாயத்திற்கு சிறந்த முன்மாதிரியாயிருப்பவர் சங்கரர் விசிட்டாத்வைதி கள் அனைவருக்கும் பிரதிநிதியாயிருப்பவர் இராமாநூ சர். துவைத சமயவாதிகளில் முன்னணியில் இருப்பவர் மதவர், குருட்சேத்திர பூமியில் இப்போது கீதா மந்திரம் என்ற ஒர் ஆலயம் எழுப்பப் பெற்றுள்ளது. அந்த இடத்தில்தான் பரந்தாமன் பார்த்தனுக்கு கீதை உபதேசம் செய்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் ஊகம். இந்த இடத்தில் முன்னுாற்றுக்கும் மேற்பட்ட வியாக்கியானங்களைச் சேகரித்து வைத்துள்ளனர். அவை யாவும் வெவ்வேறு காலத்தில் இயற்றப் பெற்றவை. அவற்றை வரைந்தவர்கள் யாவரும் ஞான ஒழுக்கங்களால் மேம்பட்டவர்கள். சான்றோர் உலகில் கீதை உயர்ந்ததோர் இடத்தைப் பெற்றுள்ளது என்பதற்கு இதுவே தக்கதோர் சான்றாக அமைகின்றது. இன்றும் புதிய புதிய உரைகள் தோன்றி வருகின்றன. சமயச் சான்றோர்கள் கீதை யக்ஞம்' என்ற பெயரில் உரைகள் நிகழ்த்தி வருகின்றனர். கீதை எண்ணிறந்த சம்பிரதாயங்களை விளக்க அடிப் படை நூலாக அமைகின்றது. இந்த உரைகட்கெல்லாம் மேலான வியாக்கியானம் ஒன்று உள்ளது. அது கண்ணன் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை. இதுவே கீதையின் கூற்றுக்கு ஒப்பான விளக்கமாகின்றது. அவதார புருடர்கள் ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையின் மூலம் புகட்டுவதுதான் முதலான இடம் பெறுகின்றது. அவர்கள் பகர்ந்தருளியவை அதற்கு அடுத்த இடம் பெறுகின்றன. இக் கோட்பாடு கண்ணனது வாழ்க்கையில் உச்சநிலையைப் பெறுகின்றது. * மனத்தகத்திலிருந்து கச்மலத்தை (அழுக்கை)க் களைந்து விடு' என்று புகட்டினார் கண்ணன். பகலவனிடத்து இருள் இருக்க இடம் இல்லாததுபோல் அச்சுதனிடம் கீழ்மை குடி கொள்ள இடம் இல்லை; ஆற்றல் படைத் தவனாய்

  • 1968-இல் நான் அந்த இடத்தை நேரில் கண்டவன்.