பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔等 வாய்மொழியும் வாசகமும் எழுந்திராய்' என்று இயம்பினவரும் அவரே. பின்னர் ஆற்றல்கள் அனைத்திற்கும் நிலைக்களனாயும் இலங்கினார். உயிர்களிடத்து அன்பு பூண்டு ஒழுகுக என்று உபதேசித் தார். தாமே அன்பின் வடிவாயும் திகழ்ந்தார். நலத்தை நிலை நாட்டும் வீரன் ஒருவனுக்கு உற்றார் வேற்றார் என்னும் வேற்றுமை இல்லை என்று எடுத்தோ தினார். பரந்தாமனது பாங்கும் அக்கணமே இருந்தது. இயற்கை கர்மமாக வடிவெடுத்தது. அதற்கு ஆதாரமாக நிற்கும் ஆன்மாவின் கண் கர்மம் இல்லை என்பது கண்ணனின் உபதேசம். கண்ணனாக வடிவெடுத்த உடல் கர்ம வீரனாக வினையாற்றியது. . மசபாரதத்தில் பங்கு பெற்ற சற்றேறக்குறைய முன்னுறுக்கம் குறையாத காவியமாந்தர்கள் எல்லோரும் கூடிச்செய்த செயல்கள் யாவும் கண்ணபிரானின் செயலில் கால் பங்குக.ட ஆகா. உடல் அவ்வளவு வினையாற்றிக் கொண்டிருந்த போதிலும் கண்ணன் என்றைக்கும் பரமாத்மா சொரூபமாகவே திகழ்ந்தார். மற்ற உயிர்கள் போல் அவர் அழவில்லை; ஏமாற்றம் அடையவில்லை; வியப்படையவில்லை; கவலைப்படவில்லை; துயருற்றதும் இல்லை; புன்முறுவல் பூத்த முகத்துடன் திகழ்ந்தார். கண்ணனை அறிபவர் கீதையை அறிவர். கண்ணன் வாழ்க் கையே கீதைக்கேற்ற பேருரை. பொது நூல் : பகவத் கீதையைச் சர்வகத சாத்திரம் என்றும் பொது நூல் என்றும் பகரலாம். காரணங்கள்: (1) முத்தி நெறியைப் புகட்டும் சாத்திரங்களே யாவற்றிலும் மேலானவை. மனிதன் அடைய வேண்டிய பேறுகளில் முக்திக்கு நிகரானது வெறொன்றும் இல்லை யாவருக்கும் ஒப்ப முடிந்த கோட்பாடு இது. கீதை முக்தியைப் புகட்டு கின்றது. வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி என்பதை அது நன்கு தெளிவுறுத்துகின்றது. (2) முக்திக்கு உற்ற நெறி யோகம். கர்மம். பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங் களும் கீதையில் இடம் பெறுகின்றன. எல்லா சாதனங்களும்