பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை - மறைமுடியின் சாரம் I 57 இம்மூன்றினுள் அடங்கிவிடுகின்றன. (3) கீதை இகபரம் இரண்டிற்கும் உரிய இடத்தை முதல் முறையாக வகுத்து வழங்குகின்றது. (4) வினைகளையெல்லாம் மேலான வினைகளாக மாற்றக் கற் துக்கொடுப்பது கீதை, இஃது இதன் தனிச் சிறப்பு. அன்னை பராசக்தியே மாந்தர் உள்ளத்தில் இச்சா, ஞான, கிரியா சக்திகளாக எழுந்தருளி புள்ளார் என்பது கோட்பாடு மனத்தில் இந்த மூன்று வித மாண்புகளும் ஒருங்கே மிளிர்ந்தால்தான் மனிதன் திண்ணியன் ஆவான் என்பதைக் கீதை வற்புறுத்துகின்றது. இவை தவிர மனிதனை நிறைமனிதனாக்குவது கீதை யின் கோட்பாடு. உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் நிறைந்த நிலைக்கு இன்றியமையாத உறுப்புகளாகும்: பேராற்றல் படைதிருப்பது முதற்கோட்பாடு. ஒழுக்கம் ஆற்றலில் அடங்கி விடுகின்றது. அடுத்த கோட்பாடு அன்பு இப்பண்பு உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான பண்பு. எல்லாவற்றையும் ஒன்றுபடுத்தும் உயரிய பண்பு அன்பு. இனி மூன்றாவது கோட்பாடு அறிவு. பட்டப்பகலை உண்டு பண்ணும் ஞாயிறு போன்றது அறிவு. அனைத்தையும் விளக்குவது அது. மாண்புகளையெல்லாம் எடுத்துக் காட்டி உயிர்களை உற்றவழிகளில் ஏவுவது அறிவு. அன்பு, அறிவு, ஆற்றல் இம்மூன்றையும் ஒருங்கே அடைந்தவனுக்கு மேலும் பெறவேண்டியது ஒன்றுமில்லை. அவனே நிறை மனிதன் ஆகின்றான். நிறைநிலையை எய்தி நிறை மனிதன் ஆக விரும்புவோர் அனைவருக்கும் கீதை பொது நூலாகும்.

  • உபநிடதங்கள் யாவும் பசுக்கள் கண்னன் பால் கறப்பவன்; பார்த்தன் கன்று: அருந்து பவர் பேரறிஞர்: கீதை என்னும் அமிழ்தம் ஒப்பற்ற பால் ஆகிறது” (தியான சுலோகம்-4)