பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சரணாகதி நெறி" சீவர்களாகிய நாம் செய்கின்ற செயல்களிலெல்லாம். இறுதியான செயல் இறைவனிடத்து அடைக்கலம் புகுதல் ஆகும். இதனைப் பாரதப் பெரும் போரில் கண்ணன் தேர்த்தட்டிலிருந்துகொண்டு பார்த்தனுக்கு உபதேசித். தான்: "அறங்களை எல்லாம் பரித்தியாகம் செய்து விட்டு என்னையே சரண் அடைக. பாபங்கள் அனைத்தினின்றும் உன்னை நான் விடுவிப் பேன். வருந்தற்க’ (18:68) என்ற இச்சுலோகம் பகவத் கீதையில் பதினெட்டாம் இயலில் 66-ஆம் சுலோகமாக அமைந்துள்ளது. இதுவே கீதையின் இறுதி சுலோகம், சரமசுலோகம் ஆகும். அடைக்கலம் புகுதல் என்பதன் பொருள் ஒருவன் தன் முயற்சி போதவில்லை, ஆகையால் இறைவனிடம் தஞ்சம் அடைந்து அவர் துணையையும் கொஞ்சம் தேடிக் கொள்ள லாம் என்பதல்ல. சிற்றோடை பெரிய நதியில் கலந்து பிறகு மாக்கடலில் சங்கமமாவது போன்றது சரணாகதி. சிவனுடைய இச்சா சுதந்திரமெல்லாம் இறைவனுடைய சங்கற்பத்தில் சேர்ந்து விடுகின்றது. சீவனுக்கென்று தனிச் செயல் ஒன்றும் இல்லை. இறைவனின் செயல் கடலின் செயல் போன்றது. சீவனின் செயல் அலையின் செயல் போன்றது. அலை, கடலுக்குப் புறம்பானதல்ல. சிவனின் செயல் எல்லாம் உண்மையில் ஈசுவரனின் செயலே யாகும், TTಧāī வானொலியில் கம்க்கி க்கி ● பேருரை (4-10-92} நிகழ்த்திய இலக்கியப்