பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 153 பக்தன் எப்பொழுதும் தன் தெய்வத்தைச் சார்ந்திருக் கின்றான். தனக்கு வரும் நலம் கேடுகள் யாவும் இறைவ னது ஆணையாகக் கருதுகின்றான். ஆகையால் பக்தன் ஒரு செயலை நன்று என்றும், மற்றொரு செயலைக் கேடு என்றும் பொருள் படுத்துவதில்லை. அறம், மறம் ஆகிய இரண்டும் ஈசன் செயல் என்ற புனிதத்தன்மை அடைந்து விடுகின்றன. அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ? இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் அம்மானே ! கன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே (580) என்பது இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய்க் குருந்த மரத்தடியில் எழுந்தருளி மணிவாசகப் பெருமானை ஆட் கொண்டபோது அவர் அருளிய பாடல் இது. வள்ளுவப் பெருந்தகையும் ஊழ் என்னும் அதிகாரத்தில், நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவதெவன் : (379) என்று வினவுவதைக் காண்கின்றோம். இதற்கு உரை வகுத்த பரிமேலழகரும் தாமே முன் செய்து கொண்டமை யானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும். இயைந்து அநுபவிக்கற்ப்ால; அவற்றுள் ஒன்றை இயைந்து அநுபவித்து ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம்” என்று விளக்குவார். அருளாசிரியர்கள் : இங்கனம் கண்ணன் கீதையில் உபதேசித்த கருத்து அருளாசிரியர்களின் அருளிச்செயல்