பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藏台莎 வாய்மொழியும் வாசகமும் களில் ஆங்காங்கு பொதிந்து கிடக்கின்றது. ஆழ்வார்கள், நாயன்மார்கள், தாயுமான அடிகள்,வடஇார் அருட்பிரகாச வள்ளலார் போன்றவர்களின் அருளிச் செயல்களில் குறிப் பாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறயிருப்பதைக் காணலாம். மனிதன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். இவற்றுள் அறம், பொருள், இன்பம் என்பன இம்மை வாழ்வுக்கு வேண்டியனவாகும்; வீடுபேறு மறுமை வாழ்க்கைக்கு வேண்டியதாகும். பெறுதற்கரிய மானிடப்பிறவி ஈசுவர இலாபத்திற்காக அமைந்தது என்றாலும், அதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று அறிந்து கொள்பவரோ மிகச் சிலரே, பின்பு அநுகூலமான குழ்நிலை, முறையான முயற்சி ஆகியவை வாயிலாகக் கடைத்தேறுவாரைக் காண்பது அரிதிலும் அரிதாகவே உள்ளது. இலட்சியம் எவ்வளவுக் கெவ்வளவு பெரியதோ அதனை அடைதல் அவ்வளவுக் கவ்வளவு அரிதாகின்றது. சிலர் ஒரே பிறவியில் முக்தியை அடைகின்றனர். பலர் எத்தனையோ பிறவிகளை எடுத்து முயலவேண்டியவர்களாகின்றனர். இவ்விடத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சரின் அருள் வாக்கு ஒன்றினை நினைவுகூரலாம், வாரணாசியில் அன்னபூரணி கோயில் என்ற ஒன்று உண்டு. அது விசுவநாதர் திருக்கோயிலுக்குச் செல்லும் ஒரு சந்தில் உள்ளது. அத்திருக்கோயிலுக்குள் நுழைந்தவர்கள் அனைவரும் பிரசாதம் பெறாமல் வெளியில் வருவதில்லை. சிலருக்கு உடனே பிரசாதம் கிடைத்து விடுகின்றது. சிலர் காத்திருந்து பெறுகின்றனர். நெடு நேரம் காத்திருந்து பெறுபவர்களும் உண்டு. ஆனால் எவர் ஒருவருக்காவது பிரசாதம் இல்லை என்ற சந்தர்ப்பமே இல்லை. அங்ங்ணமே பிறப்பெடுப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு. சிலர் இப்பிறப்பிலேயே முக்தி அடைகின்றனர். சிலர் இன்னும் இரண்டு மூன்று பிறவிகளில் முக்தி அடை