பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 重5夏 கின்றனர். வேறு சிலர் எண்ணற்ற பிறவிகள் எடுத்த பின்பு முக்திக்குரியவர்களாகின்றனர். ஆனால் எல்லோரும் முன்னது பின்னதாக முக்தி அடைகின்றனர் என்பதாகக் கூறுவார் பரமஹம்சர். சரணாகதி நெறி : அருளாசிரியர்கள் தமது அருளிச் செயல்களில் குறிப்பிட்ட அடைக்கலம்பற்றிய பல குறிப்பு களை அடிப்படையாகக் கொண்டு ஆசாரியப் பெருமக்கள் சரணாகதி தெறியை வகைப்படுத்திக் காட்டியுள்ளனர். இவற்றை இப்பொழுது விளக்குவேன். பக்தி நெறியை எல்லோரும் அதுட்டிக்க முடியாததால் உயர்ந்தோர், தாழ்ந்தோர், கற்றவர், கல்லாதவர். மகளிர் என்ற வேறு பாடுமின்றி எல்லோராலும் மேற்கொள்ளக் கூடிய நெறியி யொன்றினைக் கண்டனர், மெய் விளக்கம் பெற்ற மேலோர். ஆழ்வார்களின் தலைவரான நம்லாழ்வார் பிரபத்தியேசரணாகதியே-தமது சித்தாந்தம் என்று உபதேசித்தார். அதனால் அவருக்குப் பிரபக்க ஜன கூடஸ்தர்' என்ற ஒரு சிறப்புப் பெயரும் உண்டு. பிரபத்தி நெறியை அநுட்டிக்கும் பிரபந்தர்கள் யாவருக்கும் தலைவர் என்பது இதன் பொருள். இந்த நெறியை வேதாந்த தேசிகர், அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும் நொந்தவ ரேமுத லாக நுடங்கி அனன்னியராய் வந்தடை யும்வகை (தே. பி. 56) என்று சிறப்பித்துப் பேசுவர். அந்தியர் என்பது சண்டாளர் வரையில் உள்ளவர்கள். இந்நெறியை வைணவப் பெரு ம்க்கள் சரணாகதி', 'பரத்யாசம்”, “பரசமர்ப்பணம்’ *உபயாதுஷ்டானம்' என்ற பெயர்களாலும் வழங்குவர். சமுசார தாபதத்தால் வருந்தி வேறு உபாயத்தையும்,வேறு பலனையும், வேறு தெய்வத்தையும் நாடாத யாவரும் வா. வா.-11