பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 巫莎器 சிறிதும் இல்லாதவனாகவும் இருக்கின்றேன், அதுமட்டுமா? பொல்லாங்கு நிறைந்ததும், காமம்வெகு வரி மயக்கம் ஆகிய அழுக்கு நிறைந்ததுமாகிய தீயமனத்தினையும் பெற்றவனாக இருக்கின்றேன். எளியேனை நின் திருவடிகட்கு உரிமை யாக்கும் வண்ணம் அடியேன் நினக்கு அடைக்கலப் பொருளானேன்' என்கின்றார். அழுக்கு மனத்தடி யேன்உடை யாய் உன் அடைக்கலமே (406) என்பது அடிகளாரின் அமுதவாக்கு. அடைக்கலம் புகுந்தார் அனைவரும் தங்கள் குறைபாடு களை நீக்கி நிறையுடையராக்கி நெறிப்படுத்துமாறு: வேண்டிக் கோடலே யாண்டும் காணலாம். நோயாளி மருத்துவர்பால் அடைக்கலம் புகுவன். தன் மருத்துவர் அடைக்கலம் கொடுத்து ஏற்றுக் கொள்வர். ஏற்றுக் கொண்டதும் நோயாளியின் பொறுப்பு முழுவதும் மருத்து வரைச் சார்ந்ததாகி விடுகின்றது. இதுபோல் அடிகளாரும் ஆண்டவன் திருவாணைவழி நிற்கும் பொறுப்பு ஒன்றே உடையவராகின்றார். இன்னொரு பாடலில் அடிகள் பேசுவது: 'அறிவில் பொருள்களை உடைமையாகவும், அறிவுப் பொருள்களை அடிமையாகவும் என்றும் உடைய எம்பெருமானே! எளியேன் அறியாமையினால் வெறுக்கத் தக்க சிறுமைகளை செய்தாலும், அளவிடற்கரிய தின் பேரருட் பெருமையினால் பொறுத் தருள்பனே! நஞ்சுடைய பாம்பினை அஞ்சாது பூண்பவனே! பொங்கி எழும் கங்கை நதியைத் திருச்சடை யின் கண் தடுத்து நிறுத்துபவனே நின் திருவருளால் அடியேனின் பிறவி முதலை அறுத்தருள் பவனே! அடியேன் நின் திருவடிகட்கு அடைக்கலம்’ என்கின்றார்.