பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ić4 வாய்மொழியும் வாசகமும் வெறுப்பன வேசெய்யும் என் சிறு மையைகின் பெருமையினால் பொறுப்பவ னே!அராப் பூண்பவ னே! பொங்கு கங்கைசடைச் செறுப்பவ னேகின் திருவரு ளால்என் பிறவியைவேர செறுப்பவ னே:உடை யாய் அடி யேன்உன் அடைக்கலமே (407) என்பது மணிவாசகப் பெருமானின் அமுத வாக்கு. பிறிதொரு பாடலில் அடிகளார் கூறுவது: 1:நின்திருவருளைவிட்டுப் பி ரி யாத மெய்யன்பர்கள் பேரின்பப் பெருவாழ்வாம் நின் திருவடிச் செல்வத்தினைப் பெற்றனர். ஆனால் அடியேனுக்கு உன்னை வழுத்தத் தெரியாது- உன்னை வந்திப்பதோர் நெறியறியேன்." நின்னையும் அறியேன், உன்னை அறிவதற்கான புத்தி யோகம் எனக்கு இல்லை-: நின்னையே அறியும் அறிவறியேன்'. இத்தகைய அறிவுக்குறை உடையேன். நின்னையே அடைக்கலம் புகுகின்றேன்' என்று மனம் உருகி மொழிகின்றார். (41.4) - இந்தப் பாடல் கண்ணன் கீதையில் கூறும் புத்தியோகம் பற்றிய ஒரு சுலோகத்தை நினைவுகூரச் செய்கின்றது. என்றும் யோக முயற்சியோடு அன்புடன் என்னை வழுத்துபவர்கட்குப் புத்தியோகம் வழங்குகின்றேன். அதனால் அவர்கள் என்னை அடைகின்றனர் (10:10). சருக்கரையை நாவில் வைத்தால் அதன் இனிப்புச் சுவையை அறிய முடிகின்றது. பிறகு அந்தச் சருக்கரையைப் பல்வேறு வகைப் பலகாரங்களாகச் செய்தால் அதன் சுவையில் நன்கு ஈடுபட்டு அநுபவிக்கலாம் என்று அறிவது சருக்கரையைப் பற்றிய புத்தியோகமாகிறது. உள்ளன்போடும் உறுதியாக