பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 五芭飘 வும் யோகத்தில் நுழைபவர்கட்கு இறைவனது மகிமை சிறிது விளங்குகின்றது. அது போகத்திற்கு மேலும் தூண்டு கோலாகின்றது. பகவான் தத்து கொண்டே வருகின்ற புத்தி யோகத்தால் அவருடைய சொரூபங் மேலும் மேலும் அறியப்பெறுகின்றது. அவருடைய சொரூபத்தைத் தொடர்ந்து அறியும் அளவிற்கு பக்தன் இன்னும் அதிகமாகப் பகவானை அறிகின்றான். இந்த அடைக்கலப் பத்தின் இறுதிப் பாடல்: வழங்குகின் றாய்க்குஉன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு. விழுங்குகின் றேன்.;விக் கினேன்வினை யேன்என் விதியின்மையால் தழங்கு அரும் தேன்.அன்ன தண்ணீர் பருகத்தக் துய்யக்கொள்ளாய்; அழுங்குகின் றேன்.உடை யாய் அடி யேன் உன் அடைக்கலமே. (415) இதில் 'எம்பெருமானே! நின் அருனார் அமிர்தத்தை நீ வேண்டியவாறு வழங்குகின்றாய். அதனை அள்ளி அருந்து கின்ற அடியேனுக்கு நல்வினைப் பயன் இன்மையால் நான் விக்கி வருந்துகின்றேன். எனக்குத் தண்ணிரைப் பருகத் தந்து என்னை உய்விப்பாயாக’ என்கின்றார். இறைவன் திருவருளால் திடீரென்று நிர்விகல்ப சமாதி கூடிவிட்டால் அது தனது வீடுபேறு என்று சீவான்மா உடனே அறிந்து கொள்வதில்லை. அதில் திளைத்திருக்க அவன் முதலில் மறுதலிக்கின்றான். தேன் போன்ற இறைவனது திருநாமத்தை இனிது உச்சரித்து ஒலித்துக் கொண்டிருந்தால் போதும் என உணர்கின்றான். ஆனால் விரைவில் தடுமாற்றத்தினின்றும் நீங்கி மேல்நில்ைக்குப் போகின்றான்.