பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 66 வாய்மொழியும் வாசகமும் ஆழ்வார் பாசுரங்கனில் : பிரபத்தி நெறிதான் நம்மாழ்வாரின் நெறியாக இருப்பதால் அந்நெறிபற்றிய குறிப்புகளை பிற ஆழ்வார்களின் பாசுரங்களில் கண்டு மகிழலாம். பொய்கையாழ்வார் பாசுரம் ஒன்றில் வினை, நோய், பாவம் இவை வாசனையோடு நீங்க வேண்டுமாயின் சக்கரவர்த்தித் திருமகனைச் சரணம் புகுதலேயாகும்’ (முத. திரு. 59) என்ற கருத்து அமைந்துள்ளது. 'உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர்பட்டேன்; அத்திருவடிகளையே சிந்தித்தேன்; அவற்றில் அன்பே வடிவெடுத்தவனாய்ப் பொருந்தினேன். உன் திருவடி சேவையே சிறந்தது. நீ உலகளந்த காலத்தில் கீழ் உலகத்தி லுள்ளவர்கட்கும் மேல் உலகத்திலுள்ளவர்கட்கு மட்டுமே நின் திருவடி சேவை கிடைத்தது' என்று கூறுவார் பூதத் தாழ்வார் (80), பேயாழ்வாரோ, இன்றே கழல்கண்டேன்; ஏழ்பிறப்பும் யான்அறுத்தேன். (2) என்கின்றார். 'உன்னுடைய திருவடி சேவையால் என்னுடைய பிறவி வட்டங்கள் யாவும் ஒழிந்தன” என்று சொல்விக் களிக்கின்றார். மேலும், சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும் தொடர்; ஆழிநெஞ்சே தொழுது (24) என்று பேசுவார். இந்த மூன்று ஆழ்வார்களும் இறைவனின் திருவடிப் பெருமையையே அதிகமாகப் பேசிப் போற்று கின்றனர். இந்தத் திருவடியின் பெருமையை முமுட்சுப்படியும் ஒர் இனிய உவமையால் விளக்குகின்றது. துவயமந்திரத்தை விளக்கும் பிள்ளை உலக ஆசிரியர்,