பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி # 67 “சேவியக்கல் சேஷபூதன் இழியும் துறை ப்ரஜை முலையிலே வாய் வைக்குமாப் போலே (முமுட்சு-147) என்று சூத்திரமிட்டுக் காட்டுவர். பாலுண்ணும் பச்சைப் பகங்குழவி தாயினுடைய ஏனைய உறுப்புகளையும் விட்டு தான் உய்வதற்கு இடனாயும் பாலமுதம் சுரக்கும் ஊற்றா யும் உள்ள தாயின் கொங்கையிலே வாய்வைக்கின்றது. அது போலவே சேததன் சேஷியாகிய எம்பெருமானின் மற்ற உறுப்புகளைவிட்டு அவன் திருவடிகளையே பற்றுகின்றான். தாயின் கொங்கையைப் பற்றுதல் குழந்தைக்கு இயல்பாக இருப்பது போலவே, சேதநனுக்கும் எம்பெருமானின் இணைத்தாமரை அடிகளைப் பற்றுதல் இயல்பாகஅமைந்து விடுகின்றது. இந்தத் திருவடிகட்கு இன்னொரு பெருமை உண்டு. அதுதான் குணப்பெருமை என்கின்றார் ஆசாரியப் பெரு மகனார். சில சமயம் பரிந்துரைக்கும்-புருஷ்காரமாகச் செயற்படும் பிராட்டியும் சில சமயம் கைவிட நேரிடலாம். பெரும்பாலும் பிராட்டி சேதநனுடைய குற்றங்களை எம்பெருமானிடம் எடுத்துரைக்க மாட்டார் என்பது உண்மை. ஆயினும், எம்பெருமான் மனத்தில் இவனை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தை ஊன்றுவிப்பதற்காக, ஒரு கால் சில குற்றங்களை உரைக்கவும் நேரிடும். இங்கனம் குற்றம் உணரக்கும் பாங்கில் பிராட்டியார் சேததனைக் கை விடுபவர் ஆகின்றார். ஆனால் அந்தச் சேதநனிடம் ஊன்றிய அன்பு கொண்ட எம்பெருமான் தனக்குரிய வாத்சல்யம் முதலிய பெருங் குணங்களால் என்னடியார் அது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார்’ (பெரியாழ். திரு 4.9:2) என்று அவனை ஏற்றுக் கொள்ள முன் வந்து நிற்பன். இத்தகைய எம்பெருமானும் ஏதோ ஒரு சமயம் கைவிட நேரிடுதலும் உண்டு. இம்முறையில் சேதநனுக்கு நன்மை புரிபவர்களாகிய இரு வரும் கை விடினும், தன் அழகினால் சேததனை விலகிச் செல்லாத