பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認澄3 வாய்மொழியும் வாசகமும்: வாறு அகப்படுத்திக் கொள்ளும் அவனுடைய இணைத் தாமரை அடிகளோ அவனை விடாது பற்றிக் கொள்ளும் திண்மை வாய்ந்தனவாக இருக்கும், இதனை மனத்திற். கொண்டே நம்மாழ்வாரும் வண் புகழ் நாரணன்தின் கழல் சேரே (திருவாய் 1.2 0 எனத் திருவாய் மலர்ந்தார் போலும். இவற்றை மனத்திற் கொண்டே பிள்ளை உலக ஆசிரியர், - "பிராட்டியும் அவனும் விடினும் - திருவடிகள் விடாது திண் கழ லாயிருக்கும்’ {முமுட்சு. :46) என்று சூத்திரமிட்டு விளக்குவர். இனி, மீண்டும் ஆழ்வார்களின் பாசுரங்கட்கு வருவோம், திருமழிசையாழ்வார் தாம் எம்பெருமானின் திருவடிக்கு அற்றுத் தீர்ந்தாக உரைக்கின்றார். எம்பெரு மான் எல்லாவித சாத்திரங்களாலும் போற்றப்படுகின்றான். ஆதலால் அவனை "நூலாளன்' என்ற பெயரால் வழங்குவர். இதற்குப் பெண் பால் பெயர் 'நூலாட்டி’ என்பது. இதனால் எம்பெருமானைத் திருமழிசைபிரான் *நூலாட்டிக் கேள்வனார்” என்று குறிப்பிடுகின்றார். எம்பெருமான் நூல் வலையில் சிக்கிக் கொண்டிருப்பது போலத் தாம் அவனுடைய கால்வலையில்" (திருவடிவவை யில்) சிக்கிக் கொண்டு விட்டதாகக் கூறுவார். - -கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால்வலையில் பட்டிருந்தேன் காண் (நான். திரு. 40) என்பது ஆழ்வாரின் அமுத வாக்கு. பிறிதொரு பாசுரத்தின் "ஏன்றேன் அடிமை, இழிந்தேன் பிறப்பு இடும்பை” (ஷை-95) என்ற தொடரால் இப்பிரபத்தி நெறியைத், தெளியலாம்.