பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 露莎姆 மணிவாசகப் பெருமான் இறைவன்தாளை வணங்குவர் தற்கும் அவன் அருள் வேண்டும் என்பதை, அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்று (சிவபு-அடி 18) கூறுவார். இக்கருத்தையே பரந்த சிந்தை ஒன்றிகின்று நின்னபாத பங்கயம் கிரந்தரம் கினைப்ப தாக நீங்னைக்க வேண்டுமே என்ற தம் திருச்சந்த விருத்தத்தில் (101) பக்திசாரர் குறிப்பிடுவார். தேவரீரின் திருவடித் தாமரைகளை நாடோறும் சிந்தித்து மகிழ வேண்டுமானால் அஃது என் முயற்சியினால் தலைக்கட்டிவிடுமோ? தேவரீர் சங்கல் பியாத அளவில் அதுதானும் நடைபெறுமோ? ஆகையாலே அடியேன் தேவரீரின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்ப தற்கு திருவுள்ளம் பற்றிஅருள வேண்டும் என்பதை இவ்வடிகளில் பிரார்த்திப்பதைக் காணலாம். பிறிதொரு பாசுரத்தில், அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே என்கின்றார் (92). இதில் வீடணனுக்கு அபயம் அளித்தது போலவும், பார்த்தனை நோக்கி மாசுச;வருந்தற்க’ என்று சொன்னத போலவும் அடியேனை நோக்கி அஞ்சேல் என்று அருளிச் செய்ய வேண்டும்” என்கின்றார். - - இராமனுக்குப் பெருமாள் என்ற திருப்பெயர் உண்டு. குலசேகராழ்வார் அத் திருப்பெயரைத் தம் பெயருடன் சேர்த்துக் கொண்டு குலசேகரப் பெருமாள் எனத் திகழ் கின்றார். இதனால் அவர்தம் அருளிச் செயலும் பெருமான் திருமொழி என்ற திருநாமத்துடன் வழங்கி வருகின்றது.