பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穹”登 வாய்மொழியும் வாசகமும் இராமபிரான்மீது அதிக ஈடுபாடு கொண்டதே இதற்குக் காரணமாகலாம். அவர் இராமனது திருவடிகளைத் தம் சென்னிமீது சூடிக் கொள்ள ஆசைப்படுகின்றார். அதுதான் வெற்றரசை நீக்கி வீட்டரசைத் தரவல்லது என்று நம்பிக்கையும் கொள்ளுகின்றார். அவரது தில்லைச் சித்திர கூடத்திருப்பதிகம்.பத்தாம் திருமொழி-இராமசரிதத்தைச் சுருக்கமாகத் தெரிவிப்பது. கதை வெகு வேகமாக நடை பெறுகின்றது. திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னைத் தில்லைநகர் திருச்சித்திர கூடந்தன்னுள் அரசுஅமர்ந்தான் அடிசூடும் அரசை அல்லால் அரசுஆக எண்ணேன்மற்று அரசுதானே (10:7) என்ற பாசுரத்தில் இராமனது திருவடியைச் சென்னியில் சூடிக் கொள்ளுதலாகின்ற அரசாட்சியை விரும்புவேனே பன்றி அதற்குமாறாக சுவாதந்திரியத்தைப் பாராட்டும் மண்ணரசை ஒரு பொருளாக மதிக்க மாட்டேன்" என்று பேசுவதைக் காண முடிகின்றது. பெரும்பாலான அருளாசிரியர்கள்-ஞானச் செல்வர் கள்-இறைவன் திருவடி நிழல்' என்ற சொற்றொடரைத் தம் பாடல்களில் ஆளுகின்றனர். வெயிலில் அலைந்து திரியும் ஒருவன் தண்ணிய ஆலமரத்தின் நிழலை அடையும் போது வெப்பம் மறைந்து இனிமையான குளிர்ச்சியை உணர்ந்து அநுபவித்து மகிழ்கின்றான். அதுபோல இருள் தருமா இவ்வுலகில் சம்சார வெப்பத்தில் உழன்று தாபங்கள் எல்லாம் மறைந்த நிலையில் இறைவன் திருஷ்டியை அடையும் போது நிழலில் இருப்பது போன்ற குளிர்ச்சியைக் கற்பனையில் கண்டு அதனைத் திருவடி கிழல்' என்று உ ரு வ க ம க க் கொள்ளுகின்றான். இதனால்தான் குலசேகரப் பெருமாள் குடைகவித்ததுபோல் இராம. பிரானின் திருப்பொலிந்த சேவடியைத் தம் சென்னியின்