பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 171 மீது சூடிக் கொள்ள விரும்புகின்றார் போலும் என்று: திணைக்கத் தோன்றுகின்றது. இவ்விடத்தில் அப்பர் பெருமானின் திருக்குறுந்தொகை பதிகம் பாடல் ஒன்று நம் நினைவிற்கு வருகின்றது. மாசில் வீணையும் மாலை மதியமும் விசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி கீழலே (5.90:1) இங்கு அப்பர் பெருமானுக்கு இறைவனின் திருவடி நீழல் காதால் அநுபவிக்கும் வீணையின் கான ஒசையின் இன்பமும், கோடைக் காலத்தில் இல்லத்தின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அநுபவிக்கும் தென்றலின் ஊற்றுணர்வு இன்பமும், வெயிலில் நடந்து சென்று பயணி வழியில் தென் படும் சோலையில் வண்டுகள் இன்னோசையை தர பொய்கைக் கரையில் அமர்ந்து கொண்டு நுகரும் இன்பமும் ஆகிய மூன்று வகை இன்பங்களும் கலந்ததோர் இனிய கல்வை இன்பமாகத் தருவதைக் கற்பனையில் கண்டு நமக்குக் காட்டுகின்றார். இந்த அநுபவத்தின் நேர்த்தியை எண்ணி எண்ணி அநுபவிக்கும்போது ஒன்று பத்தாகப் பெருகுகின்ற உணர்வு நம்மிடையே உண்டாகின்றதல்லவா? மீண்டும் ஆழ்வார்களின் பாசுரங்களை நினைக் கின்றோம். ஆழ்வார் பெருமக்களில் நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் அதிகமான பாசுரங்களை அருளிச் செய்தவர்கள். குறிப்பாகத் திருமங்கையாழ்வார் திருக் குடந்தை, திருவேங்கடம், நைமிசாரணியம் திருவிண்ணகர் ஆகிய நான்கு திருத்தல எம்பெருமான்களைப் பாடும்போது சரணாகதி நெறிபற்றிய குறிப்புகளைக் காண்கின்றோம். திருமங்கையாழ்வார் திருக்குடந்தை சாரங்கபாணிப் பெருமான்மீது பா டி ய ரு னி ய திருஎழுகூற்றிருக்கை