பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼罗多 வாய்மொழியும் வாசகமும் சரணாகதி நெறியை நுவல்வதாக அமைந்துள்ளது. இஃது. **இரதபந்தம்” என்னும் சித்திரக் கவியால் அமைந்தது. செல்வம் மல்கு தென்திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த பரம!கின் அடியினை மாற்றோவினையே (43-45). என்று ஆரா அமுதனிடம் சரணாகதி பண்ணுவதை அறியலாம். திருக்குடந்தை ஆரா அமுத னிடம் இந்த ஆழ்வாருக்குத் தனிப்பற்று உண்டு. சரமப் பிரபந்தம்’ எனக் கருதப்பெறும் திருநெடுந்தாண்டகத்திலும், தன்குடங்தைக் கிடந்த மாலை நெடியானை-அடிநாயேன் நினைந் திட் டேனே (29) என்று கூறி தன் நின்ைவில் அடிக்கடிச் சேவை சாதிக்கும் ஆராவமுதனை நினைவால் வழிபடுகின்றார். பிரபத்தி செய்யும் அதிகாரி ஆகிஞ்சன்னியமும் அநன்னிய சதித்துவமும் உடையவனாயிருத்தல் வேண்டும் என்று கூறுகின்றது முமுட்கப்படி (120). இந்த சாத்திரம் பிள்ளை உலக ஆசிரியரால் அருளிச் செய்யப் பெற்றது. இஃது அஷ்டாதச இரசசியங்களுள் ஒன்றாகும். ஆகிஞ் சன்னியம் என்பது, கர்ம ஞான பக்திகளாகின்ற மற்ற: உபாயங்களின் தொடர்பற்று இருத்தலாகும். அநன்னிய க தி த் துவ ம் என்பது, ஆன்ம இரட்சணத்திற்கு எம்பெருமானைத் தவிர வேறு ஓர் இரட்சகப் பொருள் அற்றிருத்தலாகும். நம்மாழ்வார் திருவேங்கடம்பற்றிய திருவாய்மொழிப் திசத்தின் பாகரம் ஒன்றில் தம்முடைய அதன் னியசதித்துவத்தைத் தெரிவிப்பதைக் காணலாம். * திரு மலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! உன்னையொழிய உபாய மும் இரட் சசமும் ஒன்று மற்ற அடியேன் உன்திருவடிக் கீழ் என் தலைக்கும் உன்திருவடி