பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 夏*蕊 களுக்கும் இடைவெளி இல்லாதவாறு நெருங்கி நுழைந்து, உன்னை உபாயமாகப் பற்றினேன்.” (6.10:10) என்று ஆழ்வார் கூறுவதைக் காணலாம். சைவப் பெருமக்கள் இறைவனுடைய தாளையும் பக்தனுடைய தலையையும் சேர்த்து தாள் + தலை = தாடலை என்று இதே கருத்தைக் கூறுவதை நினைந்து பார்க்கலாம். திருமங்கையாழ்வாரும், நலந்தான் ஒன்று மிலேன், நல்லதோர் அறம் செய்து மிலேன்” (பெரி. திரு. 19:4) என்று திருவேங்கடம்பற்றிய திருமொழியில் நுவல்வதைக் கண்டு தெளியலாம். எம்பெருமானிடம் சரண்புகுமிடத்து அவனுடைய மேன்மைகளையும் தம்முடைய தாழ்வுகளையும் வெளி யிட்டுக் கொண்டே செய்ய வேண்டும் என்பது விதி. இவை ஆர்த்தியின் கனத்தாலே தம்முடைய குற்றங்களெல்லாம். நினைவிற்கு வந்தே தீருமாதலால் திருமங்கை ஆழ்வார் தம்முடைய குற்றங்களையெல்லாம் விவரமாகப் பேசிக் கொண்டு சரண் அடைகின்றார். நைமிசாரணியத்துத் திருமொழியிலும் (1.6) திருவேங்கடம்பற்றிய ஒரு திருமொழியிலும் (1.9) இந்த நிலையைக் காணலாம். இருள்தருமா இவ்வுலகில் வாழ்வோர் வாழ்வுபற்றிய செயல்களைக் குறிப்பிடும் வள்ளுவர், செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் (406) என்று கூறியது போலவே, சாத்திரங்களில் செய்ய வேண்டிய கருமங்கள் என்று விதிக்கப்பெற்ற நற்கருமங்களைச் செய்யா தொழிகையும், செய்யலாகாதவை என்று மறுக்கப் பெற்ற தீவினைகளைச் செய்கையும் என்று குற்றங்கள் இருவகைப்படும். இந்த இருவகைக் குற்றங்களும் தம்மிடத்தில் இருப்பனவாகச் சொல்லிக் கொள்ளுகின்றார்