பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 175. நெஞ்சு நஞ்சாக இருந்தும் வெளிநோக்கை மிக அழகாகச் செய்துகொண்டு ஆடவர்களைக் கவர்கின்றி. மாதர்களின் கண்வலையில் அகப்பட்டு அதற்காக அளவற்ற பாவங்களைச் செய்து கெட்டொழிந்தேன், போக்கிய, மல்லாத பொருள்களில் மயங்கி அவற்றில் ஈடுபட்டுப் பல் வேறு தீங்குகளை விளைவித்துக் கொண்டோமே" என்ற அநுதாபம் உண்டாயிற்று. 'பரம போக்கியமான பொருள் களில் ஈடுபட்டு நற்கதி அடைவோம்’ என்ற விவேகமும் உண்டாயிற்று. ஆதலால், தேனேய் பூம்பொழில்சூழ் திருவேங்கட மாமலைமேய, என் ஆனாய்! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே (2) என்று அடைக்கலம் புகுகின்றார். உடலைக் காட்டிலும் ஆன்மா உண்டென்றும், தெய்வம் உண்டென்றும், சாத்திரம் உண்டென்றும், புண்ணிய பாவங்கள் உண்டென்றும், பாவ புண்ணியங்கள் அநுபவிக்கும் நரகம் சொர்க்கம் உண்டென்றும், சாத்திரங் கள் கூறுகின்ற இவை ஒன்றிலும் நம்பிக்கையற்றவனா கையால் இவ்வளவென்று கணக்கிட முடியாத உயிரினங் களைக் கொலை செய்தேன். இரந்து வந்தவர்கட்கு இனிமையான சொற்களைக் கூறாமல் அவர்கள் மனம் நோகும்படியாகப் பல கடிய சொற்களைக் கூறி வெருட்டினேன். அதுதாபம் பிறந்த அக்கணமே, அன்றே வந்தடைந்தேன்; அடியேனை ஆட்கொண்டருளே (3) என்கின்றார்: - ‘புல்லாய்ப் பூண்டாய்ப் பறவையாய்ப் பாம்பாகிப் பல் விருகமாகிக்...என்பது போல, குலந்தாங்கு எத்தனையும் பிறந்து இறந்து எய்த்து ஒழிந்தேன். நலந்தான் ஒன்று