பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 வாய்மொழியும் வாசகமும் மிலேன்: நல்லதோர் அறம் செய்துமிலேன். இன்னும் பிறப்பதற்கு வினைமீதி இருந்தாலும், பிறப்பதற்கு ஆற்றல் இல்லாதபடி மிகவும் மெலிந்து போனேன். இப்படிப் பல பிறவிகள் எடுத்தாலும், அவற்றில் ஒன்றிலாகிலும் தமக்குத் தெரியாதவாறு நேரிடும் சந்தர்ப்பங்களில் கூட ஒன்றிலாகி லும் நன்மையொன்றும் செய்யவில்லை. இந்நிலையில், அலந்தேன வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே (4) என்கின்றார். அதிபாதகம், உபபாதகம், மகாபாதகம் என்னும்படி யான பாவங்கள் எப்படிப் பட்டவையாயினும், செய்யும் போது சிறிதும் சலியாமல் செய்து விட்டேன். பிறகு அப்பாவங்கட்கு நேரக்கூடிய பலன்களைக் கேள்வியுற்று மிகவும் துக்கப்பட்டேன். உன் இணைத்தாமரை அடிகளை தினைந்து துதிக்கவும் ஆற்றலற்று நின் திருவடிகளை வந்தடைந்தேன். - அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆடகொண்டருளே (5) என்று சரணம் அடைகின்றார். இந்த உடல் பஞ்சபூதங்களால் ஆகியது. மண்ணையும் மணலையும், கல்லையும், சேற்றையும் கொண்டு வீடு கட்டு மாப்போலே, பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களைக் கொண்டு இந்த மாமிசபிண்டம் உண்டாக்கப்பட்டது. தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டா நாற்றம் மிகுந்தது இந்த உடல். இதில் அகப்பட்டுத் துவண்டு போனேன். இனி ஒர் உடலையும் ஏற்க ஆற்றலின்றி, பிறவி வட்டங்கட்கு அஞ்சி நின்திருவடி வாரத்தில் வந்து விழுந்தேன். o அண்ணா! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே (6) என்று ஏங்கி அரற்றுகின்றார்.