பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரண்ாகதி நெறி 五7ァ கிளரொளியிளமை கெடுவதன் முன்னம் நல்ல வற்றைக் கற்காமல் அதற்கு எதிர்த்தட்டாக அறிவற்ற வனாய்ப் பல தீய செயல்களைப் புரிந்து விட்டேன். குமரப் பருவத்திலே எப்பொருளைத் கண்டாலும் அதனை மாதர்க் காகத் தேடித் திரிந்து அலைந்து சதிர்கேடனானேன். இங்ங்ணம் சென்ற காலமெல்லாம் பழுதே கழிந்தாலும், இனியாகிலும் அடையத்தக்க விஷயத்தில் தொண்டு பூண்டு அமுதம் உண்ணப் பெறலாம் என்று நின் திருவடிகளை வந்தடைந்தேன். அரியே வந்தடைந்தேன்; அடியேனை ஆட் கொண்டருளே (7) என்று பிரலாபிக்கின்றார். என் வினைப்பயனால் பல பிறவிகளில் பிறந்து கொண்டே வந்தேன். எதிர்பாராமல் தற்செயலாக நின்னைக் காணவேண்டும் என்ற ஆசை பிறந்தது இப்பிறவி :பில்; இதனால் நான் நின்ற நிலை மிகவும் பொல்லாதது என்று என் நெஞ்சில் பட்டது. இதுகாறும் நிகழ்ந்தவற்றை யும் இனி நிகழப்போகின்றவற்றையும் நினைந்து சகிக்க மாட்டாமல் நின் திருவடிகளை வந்து பணிந்தேன். ஆற்றேன் வந்தடைந்தேன்; அடியேனை ஆட் கொண்டருளே (8) என்று நெஞ்சுருகிப் பேசுகின்றார். இப்படி இந்தப் பதிகத்தில் ஒருதடவைக்கு ஒன்பது தடவையாகப் பாசுரங்களில் பேசுகின்றார். மேலும், இனி, என்னுடைய முன்னைய தீவினை களை நோக்கி என்னைக் கைவிடலாகாது. நீயோ சர்வ இரட்சகன். அடியேன் அனாதன்; அநத்யகதி , என்று விண்ணப்பித்துச் சரண் அடைகின்றார். வா. வா-12