பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 & வாய்மொழியும் வாசகமும் ஆப்பிலியப்பன் சந்நிதி என வழங்கப்படும் திருவிண்ணகர் எம்பெருமானைச் சரண் அடைவதையும் காண்போம். ;ங்கும் தமக்கு ஆர்த்தி விளைந்ததை எம்பெருமானிடம் எடுத்துக் கூறிக் கதறுகின்றார். 'திருவிண்ணகரில் சேவை சாதிக்குக் எம்பெருமானே! பிறரது அற்பமான சொற் களைப் பொறுத்துக் கொண்டிருந்தேன். பஞ்சேந்திரியங் களுக்குரிய பொருள் பெண்டிர் என்று இரண்டையும் அதுபவித்துத் தீர்த்தேன். நண்பர்களிடத்து அன்பையும் வேண்டாதவர்களிடத்துப் பகையையும் நிறைவேற்றி விட்டேன். இப்போது அந்த இரண்டு இயல்புகளும் நெஞ்சினின்றும் நீங்கி விட்டன. ஆபாச பந்துக்களின் உதவையும் விட்டொழித்தேன், நின்னை உணர்தல், என்னை உணர்தல், உய்யும் வழியை உணர்தல், பேற்றை உணர்தல், பேற்றின் விரோதிகளை உணர்தல் என்ற 'அர்த்தபஞ்சக ஞானம்’ அடியேனிடத்து இல்லை. ஆகையால் துக்கங்கட்கு மூலமான பிறப்பு இறப்புகளை உடையவனானேன். மாதர்களின் கருக்குழியில் கிடந்து படாத பாடு பட்டேன். இப்படிப்பட்ட உடற்பிறவி நமக்குத் தகாது என்று உணர்ந்து அப்பிறவியை அறுத்தொழிப்பதற் காக நின்திருவடியை நாடி வந்தேன். சிற்றின்பங்களை நாடி அநியாயமாய்க் கெட்டொழிந்தேன். படைப்புக் காலத்தில் என்னை நல்வழிப்படுத்த நீ நல்கிய இந்திரியங்கள் வழிவிலகி கொடிய சம்சாரத்தில் தள்ள நினைத்து என்னை இம்சிக் கின்றன. பலவகைப் பாபங்களும் அடியேன்ைச் சூழ்ந்து கொண்டு வெந்நரகில் வீழ்த்தப் பார்க்கின்றன. நின்னை பல்லால் மற்றோர் தெய்வம் இல்லையென்று உணர்ந்து நின்னை வந்தடைந்தேன். இவ்வாறு நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே தேறேன் உன்னையல்லால் திருவிண்ணகரானே' என்று ஒரு முறைக்கு ஒன்பது முறை களாக ஒலமிட்டுக் கொண்டு ஒப்பிலியப்பனைச் சரண் அடைகின்றார் ஆழ்வார். எம்பெருமானைச் சரண் அடைவதற்குப் பிராட்டி யாரின் புருஷகாரம் மிகவும் இன்றியமையாதது என்பது