பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

歪&差 வாய்மொழியும் வாசகமும்

  • நீரிலே நெருப்புக் கிளருமாப்போல குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக (முமுட்சு-127)

என்று சூத்திரமிட்டுக் காட்டுவர். பகவான் மிக்க அருள் நிறைந்த திருவுள்ளத்தனாக இருப்பினும் சேதநன் செய்த அளவு கடந்த குற்றங்கள், குளிர்ந்த நீரில் நெருப்பு பிறத்தல் போன்று, அவனுக்குச் சீற்றத்தை உண்டாக்குகின்றன. அச்சீற்றத்தை மாற்றிக் கொண்டு இவனுடைய குற்றங் களைப் பொறுப்பது பிராட்டியாருக்காகவே என்பது உளங் கொள்ளத் தக்கது. பிராட்டியார் உலக உயிர்கட்குத் தாயாக இருப்பதால் இவர்களுடைய துக்கத்தைப் பொறாதவராயும், பகவா னுக்குப் பத்தினியாக இருப்பதால் அம்முறையில் அவனுக்கு இனிய பொருளாகவும் இருக்கின்றார். இக்காரணத்தால் இவரே அருள் நிறைந்த புருஷகாரமாக அமைந்து விடுகின்றார். இதனால் இருவரையும் உபதேசத்தால் திருத்துகின்றார். ரீவசனபூஷணமும் இதனை, 'இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே (12) என்று பகர்கின்றது. இதனை விளக்குவேன். இறைவனைத் திருத்துவது எவ்வாறு? இறைவனை நோக்கி இவ்வாறு பேசுவார்; பிரானே, இவனுடைய குற்றங்களைக் கணக்கிட்டு இப்படிக் கதவு அடைத்தால் அவனுக்கு வேறு புகல் எங்கு உள்ளது? உமக்கும் இவனுக்கும் உண்டான உறவுமுறை உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது" (திருப். 28) என்று ஆண்டாள் கூறுவதுபோல குடநீர் வழிந்தாலும் போகாதது ஒன்றன்றோ? உடைமை யாக இருக்கும் இவனை அடைவதால் சுவாமியாக இருக் கும் உம்முடைய பேறாக அன்றோ இருப்பது? உமக்கு நான் இதை எடுத்துச் சொல்வது மிகை அன்றோ? காப்பாற்ற