பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹蚤 வாய்மொழியும் வாசகமும் அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறைமார்பா? கிகரில் புகழாய்! உலகம் மூன்று உடையாய்! என்னை ஆள்வானே ! கிகளில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (6.10:10) என்ற திருவாய் மொழிப் பாசுரம் இவன் சரண்புகுந்ததைக் காட்டுகின்றனது. முன்னர்க் குறிப்பிட்ட நான்கு திருக்குணங்களும் இறைவனை ப் பற்றுகைக்குத் துணை செய்த விளக்கத்தைப் பாசுரங்களில் கண்டு மகிழலாம். நிகரில் புகழாய்!” என்ற தனால் வாத்சல்யம் என்ற திருக்குணமும், உலகம் மூன்று உடையாய் என்பதனால் சுவாமித்துவம் என்ற பெருங் குணமும், என்னை ஆள்வானே' என்றதனால் செளசீல்யம் எ ன் ற மேன்மைக் குணமும், திருவேங்கடத்தானே' என்பதனால் சேதநன் தன் கண்களால் கண்டு மற்றுகைக்கு எளியனாக இருக்கும் செளலப்பியம் என்ற உயர்ந்த குணமும் விளக்கம் பெறுவனவாக ஆன்றோர்கள் அருளிச் செய்துள்ளனர். பிரபத்தி நெறிக்கு இதுவே முக்கிய பாசுர மாக எடுத்துக்காட்டப் பெறுகின்றது. இங்கனம் பிரபத்தி நெறியினைத் தெளிவாக எடுத்துக் காட்டுவன ஆழ்வார்களின் ஈரத்தமிழ்ப் பாசுரங்கள். அறிய முடியாத சில வேதப் பொருள்களையும் ஆழ்வார்களின் பாசுரங்கள் தெளிவிக்கின்றன என்பதை வேதாந்த தேசிகன், செய்யதமிழ் மாலைகளும் தெளிய ஒதி தெளியாத மறைகிலங்கள் - தெளிகின்றோமே (தே. பி.40) என்ற பாசுரத்தால் புகழ்ந்து பேசுவர்.