பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி I 87° களுக்கும் சுவாமியாயிருத்தலை அறிவிப்பதாகும். அன்பர் களைக் காணுங்கால் எம்பெருமானுக்கு உண்டாகும் முகமலர்ச்சியும் புன்சிரிப்பும் அவர்களோடு புரையறக் கலக்கும் சீலகுணத்தையும் தெரிவிக்கும். ஆசனபதுமத்தில் அழுந்தி நிற்கும் எம்பெருமானுடைய இரண்டு திருவடிகளும் அனைவரும் பற்றுவதற்கு இடந்தந்து திற்கின்றன. இத்தன்மையானது செளலப்பியத்தை வெளிப்படுத்து கின்றது. இங்ங்ணம் நிற்கின்ற நிலையே, எம்பெருமானைத் தவிர வேறு புகலிடமற்றிருக்கும் நமக்கு இரட்சகம் எனக் கொள்ளல் வேண்டும். - பிரபந்நன் விரும்பும் இரட்சகத் தன்மையும், கைக் கரியபரன் விரும்பும் போக்கியத் தன்மையும் அர்ச்சை யாகின்ற திவ்வியமங்கள் விக்கிரகத்தில் காணப்படும். முடிச்சோதி யாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி கிே ற தாமரையாய் அலர்ந்ததுவோ? -திருவாய் 3.1:1 என்று நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வினவுவதை ஈண்டு நினைவு கூர்ந்து மகிழ்கின்றோம், புருஷகார பலத்தாலே எம்பெருமானின் சுவாதந்திரியம் தலை சாய்ந்தால் தலையெடுக்கும் குணங்கள் வாத்சல்யம்; சுவாமித்துவம், செள் சீல்யம், செளலப்பியம் என்ற திருக்குணங்களாகும். இவை இருட்டறையில் விளக்குச் போலே பிரகாசிப்பது இங்கே' (அர்ச்சாவதாரத்திலே) (140) என்று ரீவசனபூஷணம் குறிப்பிடுகின்றது. இதனால் தான் பிரபந்தர்களின் தலைவரான நம்மாழ்வார் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு திருவேங்கட முடையானிடம் சரண்புகுகின்றார்.