பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏8翰 வாய்மொழியும் வாசகமும், பெருமாளிடம் இக்குணங்கள் பிரகாசிக்கும் முறையை யும் அவற்றுடன் நிற்கும் நிலையே நமக்குத் தஞ்சம் என்பதையும் மேலும் விளக்குவர். 'திருக்கையிலே பிடித்த திவ்வியாயுதங்களும்: வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும், ஆசன பதுமத்தில் அழுந்தின திருவடிகளுமாய் நிற்கின்ற நிலையே நமக்குத் தஞ்சம்” (மு.முட்சு-142) இதனை விளக்குவது இன்றியமையாதது ஆகும். அர்ச்சையில் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனா யிருத்தலை நாம் காண்கின்றோம். இங்கனம் ஆயுதங்களை தாங்கிக் கொண்டிருத்தல் வன்மை வாய்ந்த வீரனுடைய செயலாகும். தன்னை வந்தடைந்த அடியார்களின் விரோதி களைப் போக்குவதற்கு இப்படைகள் பயன்படுகின்றன. இவ்வாயுதங்களைத் தாங்கும் வன்மை மட்டும் போதிய தன்று. விரோதிகளையும், அவற்றைப் போக்கும் முறை களையும் அறிபவனாய் இருத்தல் வேண்டும்; இங்ஙனம் இவ்விஷயத்தை நோக்குங்கால் தன்னைப் பற்றிய சேததனுடைய காரியத்தைச் செய்யும்போது பயன் படு வையான ஞான சக்திகளுக்குப் பிரகாசங்கள் திவ்விய ஆயுதங்கள் என்பது தெரிகின்றது. சேதநர் தாம் செய்த குற்றங்களை நினைந்து, *அத்தோ! இத்தனைப் பிழைகளை இழைத்த நாம் எங்ஙனம் அத்துணை உயரிய சுவாமியைச் சென்றடைவது?” என அஞ்சி அகலாதிருத்தற் பொருட்டே, அவருடைய திருக்கரம் அபய முத்திரையுடன் சேவை அளிக்கின்றது. இஃது, உங்கள் குற்றங்களை நினைத்து நீங்கள் அஞ்ச வேண்டா; என்னை வந்தடையுங்கள். யான் உங்களை அங்கீகரித்துக் கொள்வேன்’ என்னும் அன்பைக் காட்டும் வாத்சல்யத்தின் அறிகுறியாகும். எம்பெருமான் சிரசில் கவித்திருக்கும் இரத்தினமுடி, அவன் எல்லா உலகங்