பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 185 மயர்வத மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்னும் இறைவனுடைய ஐந்து நிலைகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று நன்கு கண்டவர்கள்: இந்த ஐந்து நிலைகளிலும் எல்லாத் திருக்குணங்களும் நிறைந்த இடம் அர்ச்சாவதாரமே என்று தெளிந்தவர்கள். இந்த் அவதாரமே பிரபத்தி செய்வதற்கு ஏற்ற இடம் என்று முடிவுகட்டியவர்கள். ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே” - {பூர்வச. பூஷ. 38) என்பது பூரீவசனபூஷண வாக்கியம். முமுட்கப்படியிலும் செளலப்பியத்திற்கு எல்லைநிலம் அர்ச்சாவதாரம்" (மூமுட்சு-139) என்று கூறுவார். மேலும், 'இதுதான் (அர்ச்சாவதாரம்) பர வியூக விபவங்கள் போலன்றிக்கே கண்ணால் காணலாம் படி இருக்கும்' (மு.முட்சு-140) என்று இவ்வவதாரத்தின் எளிமையை விளக்குகின்றார் பிள்ளை உலக ஆசிரியர். இன்னும் . இக்குணங்கள் எல்லாம் நம்பெருமாள் பக்கவில் காணலாம்" (முமுட்சு-141} என்று விவரிப்பர். ‘நம்பெருமாள்” என்பது திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாளைக் காட்டும் எனப் பொருள் படுத்தாமல் நம்முடைய பெருமாள்' என்று. காரணக் குறியாய்ப் பொருள் படுத்தியுள்ளார். இங்கனக் பொருள் படுத்தியதற்குக் காரணம், வெவ்வேறு தேயங்களி லும், இல்லங்களிலும் எழுந்தருளியிருக்கும் அர்ச்சையில் ஈடுபட்டிருப்பவரும், முற்கூறிய குணங்களை அவரவர் விரும்பிய அந்தந்த அர்ச்சையில் காணலாம் என்பதைத் தெரிவித்தற்காகவே ஆகும்.