பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் I 3. {} இந்த ஆசாரியப் பெருமகனார் பிரபத்தியை-சரணா கதியை-நான்கு வகையாகப் பிரித்தும் விளக்குவர், 1, ஸ்வகிஷ்டை : பிரபத்தியாகிய அங்கியையும்.அதன் அங்கங்களையும் .ெ த வரி வா ய் அறிந்து தாமே எம்பெருமானைச் சரண் அடைதலாகும் இது. 2. உக்திகிஷ்டை என்பது, ஆநுகூல்ய சங்கல்பம் முதலிய அங்கங்களில் சிறப்பான ஞானம் இல்லாத அதிகாரி கள், எம்பெருமானைத் தவிர, வேறு பற்று இல்லாதவராய், நாம் பிரார்த்தித்தால், அவன் காப்பான் என்ற நம்பிக்கை கபுடன் நின்று, முழுமையான பிரபத்தியை வெளியிடுவதும், ஆசாரியனால் உபதேசிகப்பட்டதுமான வாக்கியத்தாலே தம்மைக் காப்பதை அவன் பொறுப்பாகக் கொள்ள வேண்டும் என்பதாகும். 3. ஆசாரியகிஷ்டை என்பது, இர க சி யார் த், தங்களை உபதேசித்த ஆசாரியன் எம்பெருமானிடம் செய்யும் சரணாகதியில் அடங்கியிருத்தலாகும். 4. பாகவதகிஷ்டை என்பது, பூர்ண அதிகாரியான ஒரு பாகவதர் எம்பெருமானிடம் செய்யும் சரணாகதியில் அடங்கியிருத்தலாகும். சரணாகதிநெறி எந்தவித நியமமும் இல்லாத நெறி யாகும். பக்தி நெறிக்குச் சிலவரையறைகள் (நியமங்கள்) இருப்பது போல சரணாகதிநெறிக்கு எந்தவிதமான நியமும் இல்லை. இத்த நெறியைக் கண்ணன் காண்டீபனுக்குத் தேர்த் தட்டிலிருந்து உபதேசித்தான் என்பதை நாம் அறிவோம். உபதேசித்த இடம் போர்க்களமாதலால் தேச நியமம் காலநியமம் முதலான வரையறை இல்லை. "பிரபத்தி நெறிக்கு தேசநியமமும், கால நியமமும் பிரகார நியமமும், அதிகாரி நியமமும் இல்லை” (ஆரீவச. பூஷ. 24).