பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 夏馨麦 என்ற பூரீவசன பூஷண வாக்கியம் இக்கொள்கைக்கு அரணாக அமைகின்றது. தேச நியமமாவது, தூய இடத்தில்தான் (புண்ணிய தலங்களில்தான்) செய்ய வேண்டும், ஏனைய இடங்களில் செய்தலாகாது என்பது. காலநியமமாவது, வேனிற்காலம் முதலான காலங்களில்தான் செய்தல் வே ன் டு ம், மற்றைய காலங்களில் செய்தலாகாது என்பதாகும், பிரகார நியமமாவது, நீராடல் கால் கழுவுதல் என்பன போன்ற வற்றை முன்னாகக் கொண்டு செய்ய வேண்டும், வேறு வகைகளில் செய்ய வொண்ணாது என்பது. அதிகாரி நியமமாவது, முதல் மூன்று வருணத்தார்கள் அல்லாதவர் களாக இருக்கலாகாது என்பது. பல நியமமாவது, இம்மை மறுமைப் பலன்களில் இன்ன பலத்திற்கு இது சாதனம், மற்றைய பலன்கட்கு இது சாதனமன்று என்பதாகும். தேசகால நியமங்கட்கு இராமாயணத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு தருகின்றார் பிள்ளை உலக ஆசிரியர். {பூரீராமா. யுத்த 17:46). இராமாயணத்தில் வீடணன் சரணாகதி செய்த காலத்தில் சுக்கிரீவனும் சாம்பவானும் வன்பகையுடையவர்களாயும் மகா பா விக ள | யும் இருக்கின்ற இராவணனிடமிருந்து இடமல்லாத இடத்தி லும், காலமல்லாத காலத்திலும் வந்தான் (வீடணன்; ஆதலால் முற்றிலும் ஐயப்படத் தக்கவனாக உள்ளான்' (ஷ் 12:57) என்கின்றனர். இதனை மறுக்கும் மாருதி *இதுவே தேசமும் இதுவே காலமும்’ (கம்பரா. வீடணன் அடைக்கலம் 85-105) என்கின்றான். தக்க காரணங்கனைச் சொல்லி இராமனும் வானரமுதலிகள் சொன்னவற்றை யெல்லாம் சீர்தூக்கி ஆய்ந்து, மற்றினி உரைப்ப தென்னோ? . மாருதி வகுத்துச் சொன்ன பெற்றியே பெற்றி மின்ன > தன்றெனிப் பிறிதொன் றன்னும்