பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕴莎别 வாய்மொழியும் வாசகமும் வெற்றியே பெறுக தோற்க வீக வீயாது வாழ்க பற்றுத லின்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றாணை (டிெ-108) என்று கூறி வீடணனை ஏற்றுக் கொள்ளுகின்றான். இந்நெறிக்குப் பிரகார நியமும் இல்லை, இதனை திரெளபதி, அருச்சுனன் வாழ்க்கையில் காணலாம். திரெளபதி மாத விலக்காக இருக்கும் போதே சரணம் அடைகின்றாள்; அதுவும் நீசர் நடுவே சரணம் அடை கின்றாள். பார்த்தனுக்குப் பிரபத்தி நெறி போர்க்களத்தில் உபதேசிக்கப் பெற்றது, இதனால் பிரபத்தியைப் புண்ணிய தேசத்தில்தான் செய்ய வேண்டும் என்ற நியமனம் இல்லாது போயிற்று; வேனிற் காலத்தில்தான் செய்ய வேண்டும் என்ற காலநியமமும் இல்லாது போயிற்று. நீராடிய பின் தான் செய்ய வேண்டும் என்ற பிரகார நியமமும் இல்லாது போயிற்று. நீசர் நடுவே இவ்வர்த்தம் கேட்டதால் தூய்மை யின்மையும் விலக்கில்லை என்பது தெளிவாயிற்று. மேலும் இதனால் பிரபத்தியைச் செய்யத் தொடங்குங்கால் தூய்மை இல்லாதிருப்பவனுக்குத் தூய்மை சம்பாதிக்க வேண்டா: தூய்மையாயிருப்பவனுக்குத் துர ய் ைம யி ன் ைம ைய ச் சம்பாதிக்க வேண்டா என்பது பிள்ளை உலக ஆசிரியரின் அறவுரை (பூரீவச. பூஷ.. 31). பாஞ்சாலியும் பார்த்தனும் பிரபத்தியைச் செய்யும் நிலையிலும் அதனைக் கேட்கும் நிலையிலும் அதற்கு உறுப்பாகத் தூய்மையைத் தேடாத நிலையிலும் இருப்பதைக் காண்கின்றோம்; அவரவர்கள் இருந்தபடியே பிரபத்திக்கு அதிகாரிகள் ஆனார்கள். நம்பிள்ளையின் மாணாக்கராகிய வேல்வெட்டிப்பிள்ளைக்கு இதனையே சொன்னார் பிள்ளை அவர்கள். பிரபத்திக்கு அதிகாரி நியமும் இல்லை என்பது விதி. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. (ரீவச. பூஷ. 23,24.)