பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

逐$尝 வாய்மொழியும் வாசகமும் விளக்கினோம். இந்தப் பிரபத்தியை-சரணாகதிநெறியைகுறித்த காலத்தில் பெறலாம். ஒரே பலனுக்காக இதனை இருமுறை அநுட்டித்தல் கூடாது. இந்த உடல் நீடிக்கும் வரையில் வினைப் பயன்களைத் துய்த்து உடல் முடிவில் முக்தியைப் பெற விரும்பிப் பிரபத்தியை அநுட்டித்தால் அங்ங்ணமே பெறலாம். சரணம் ஆகும் தனதாள் அடைத்தார்க்கு எல்லாம்; மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் (9.10:5) என்பது பிரபத்தி நெறியை நமக்கு வழங்கிய நம்மாழ்வாரின் அமுதவாக்கு. * - ஆழ்வார் திருவடிகளே சரணம்” + சரணாகதி நெறி-ஒரு தத்துவமாக வைணவத்தில் சேர்ந்துள்ளது. சைவத்திலும் ஆடைக்கலம்' என்ற கருத்து உண்டு. எ-டு. மணிவாசகப் பெருமானின் அடைக்கலப் பத்து காண்க. முருகப்பெருமான்மீதும் சரணம் பற்றிய பாடல்கள் ஏராளம். கிறித்தவ சமயத்திலும் அடைக்கல்ம்' என்ற கருத்து உண்டு. அடைக்கலம்", அடைக்கலசாமி' என்று குழந்தைகட்குப் பெயரிடும் முறையைக் காண்க. அண்மைக் காலத்தில் புகழோங்கி நிற்கும் ஐயப்பசாமியைச் சார்ந்த பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்ற குரலைக் கூட்டமாக எழுப்புவதையும் காணலாம்.