பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مجمہ 9. தமிழ் முருகன்’ குன்றே மகிழ்ந்த குணக்குன்றே: கோவே! தணிகைக் குருபரனே! நன்றே தெய்வ நாயகமே! கவிலற் கினிய கல்உறவே! என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்; இன்றே காணப்பெறில் எந்தாய்! * - இறவேன் பிறவேன் இருப்பேனே! -அருட்பிரகாச வள்ளலார் முருகப் பெருமான் தமிழர் தம் தனிப்பெருங் கடவுள். இயற்கை நிலையையொட்டி நிலத்தைப் பாகுபாடு செய்த பண்டைத் தமிழர்கள் மலை சார்ந்த பகுதியைக் குறிஞ்சி' என்று பெயரிட்டனர். அந் நிலத்திற்குரிய கடவுளாககுறிஞ்சிக் கிழவனாக.முருனைக் கொண்டனர். சேயோன் மேய மைவரை உலகம்’ என்பது தொல்காப்பியம். சங்ககாலத்தில் பெருவழக் காக இருந்த இந்திரன், பலதேவன் ஆகியோரின் வழிபாடு வழக்கொழிந்தது. ஆனால் சங்க காலம் தொட்டு இன்று

  • சென்னை கந்தசோட்டம் 65-வது கந்தர் சஷ்டி விழாவையொட்டி (1992) வெளியிட்டது (இலவசம்)

1. திருவருட்பா - முதல்திருமுறை - மருண்மாலை விண்ணப்பும் - 7. 2. தோல். பொருள். அகத்திணை. 5