பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 96 வாய்மொழியும் வாசகமும் வரை முருக வழிபாடு நின்று நிலவுகின்றது. ஆயினும் நாளடைவில் தமிழகம் நீங்கலாக இந்திய நாட்டின் இந்த வழிபாடு குன்றித் தன் சிறப்பை இழந்து விட்டது. குறு முனியாகிய அகத்தியனுக்குத் தமிழுணர்த்திய ஆசானாக மூருகன் கருதப்பெறுகின்றான். ஆகவே, தமிழ் "என்றுமுள தென்தமிழ் ஆகின்றது. இதற்கு முதன் முதலாக இலக்கணம் வகுத்த குறுமுனி தமிழ்முனி ஆகின் றார். கண்ணுதற் பெருங் கடவுள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பங்கு கொண்டவர். இறையனார்’ என்ற பெயர் கொண்டவர். அவர் தருமிக்காக நக்கீரருடன் சொற்போர் நிகழ்த்தியதும் அதே சங்கத்தில் முருகப் பெருமான் 'இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்குச் சங்கப் புலவர்களின் உரைகளைக் கேட்டுச் சிறந்த உரை எது என அறுதியிட்டுக் கூறியதும் தமிழ் வரலாற்றின் மைல்கற்கள். நாளும் இன்னிசையால் தமிழ் வரப்பும் ஞான சம்பந்தன் குமரனின் திருஅவதாரமாகப் போற்றப் பெறும் வரலாறும் உண்டு. இறைவன்மீதுள்ள திருப்பாடல் களைக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதினால்தான் அவனது அருளைப் பெறலாம் என்பது அருளாசிரியர்கள் கண்ட உண்மை. ஆனால் முருகப் பெருமான் தன்னைத் தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன்.

  • முத்தமிழால் வைதாரையும்

அங்கு வாழவைப்போன்’ என்பது அருணகிரியாரின் அமுத வாக்கு. இவற்றால் தமிழர்கள் முருகப் பெருமான்மீது கொண்ட “呜粤置 அன்பை அறிய முடிகின்றது. தமிழ் நெடுங்கணக்கின் அமைப்பும் முருகத் தத்துவத் தின் அடிப்படையில் அமைந்திருப்பது நமக்கு மட்டற்ற 3. கம்ப. ஆரணிய அசத்திய - 47 4. கந்தரலங். 22