பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் முருகன் i gy மகிழ்ச்சியைத் தருகின்றது. முருகப்பெருமானின் பன்னி ரண்டு திருக்கைகளும் பன்னிரண்டு உயிரெழுத்துகள்; அவ னுடைய பதினெட்டுக் கண்களும் (?) பதினெட்டு மெய்யெ முத்துசள் அவனது ஆறு தலைகளும் வல்லினம், மெல்லி னம், இடையினம் என மூன்று பிரிவுகளாகவுள்ள ஆறு எழுத்துகள். அவனுடைய வேற்படை ஆயுத எழுத்து. *முருகு' என்ற சொல்லிலுள்ள எழுத்துகளில் 'மு' - மெல் வினம்; கரு' - இடையினம்: 'கு' - வல்லினம். இங்கனமே தமிழ் என்ற சொல்லிலும் த - வல்லினம்; மி. மெல் வினம்; ழ் - இடையினம் என்று மூன்று இனங்களும் அமைந்துள்ளன. இதனால் முருகன் தமிழ்க் கடவுளா கின்றான் என்று சொல்லி மகிழ்வர் தமிழ் ஆர்வலர்கள். இக் கூற்றுகளும் கந்தவேளைத் தமிழ்ப் பெருங் கடவுளாக அறுதியிட அரணாக அமைகின்றன. . У. கண்ணிகர் மெய்யும் சென்னிக் கணம் உறழ் இனத்தின் கூறும் திண்ணிய தோள்க ளேபோல் திகழ்தரு உயிரும் வேறொன்(று) எண்ணுதற் கரிய தாகும் எ.கமும் இயலிற் காட்டும்; புண்ணிய முனிக்கோள் செவ்வேள் பொற்பதத் தடிமை தானே. என்ற திருப்பாடலினால் மேற்காட்டிய உண்மைகள் தெளிவாகின்றன. - மேலும், சில உண்மைகள் நம்மைச் சிந்திக்க வைக்கின் தன. ஓம்’ என்னும் பிரணவத்தில் அ- படைத்தலை யும், உ- காத்தலையும், ம- ஒடுக்குதலையும் உணர்த்து வனவாகக் கருத இடம் தருகின்றது. முருகு' என்ற சொல்லிலும் மு=ம்+உ; ரு=ர்+உ; கு= க்+உ என்று.