பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் முருகன் 199 ஏற்ப இலக்கியங்கள் அவனைச் சேய்' என்று குறிப்பிடு கின்றன. இவனது திருவுருவப் பொலிவினைக் கண்டு மகிழ்வதற்கு, சேலார் வயல்பொழில் செங்கோ டனைச் சென்று கண்டுதொழ காலா யிரங்கண் படைத்தில னேஅந்த நான்முகனே (90) என்று தம் அங்கலாய்ப்பினைப் புலப்படுத்துவர் வாக்கு நலம் படைத்த அருணகிரிநாதர். 'கலியுகவரதன் எனப் போற்றப்பெறும் கந்தவேளின் ஒப்பற்ற கண்கவர் வனப்பினைக் கச்சியப்ப சிவாச்சாரி வாரும் சூரபன்மன் வாய்மொழியாக, ஆயிரங் கோடி காமர் அழகெலாம் திரண்டொன் றாகி மேயின எனினும் செவ்வேள் விமலமாஞ் சரணம் தன்னில் தூயகல் எழிலுக்கு ஆற்றாது என்றிடில் இனைய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்? அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும் எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி னாலும் கண்ணினால் அடங்காது உன்னில் கருத்தினால் அடங்காது என்று எடுத்துக் காட்டித் தம்மையே மறந்த நிலையை எய்துவர். 5. கந்த புரா, 4.12 : 480, 441.