பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器莎纷 வாய்மொழியும் வாசகமும் வள்ளிநாயகன் தெய்விக மனங்கொண்டவன் என்பதை நக்கீரர் பெருமான்,

  • மணங்கமழ் தெய்வத்து

இளகலம், (முருகு - அடி 299) என்று போற்றி மகிழ்வர். அவனது ஆறு முகங்களையும் பகுத்தறிவு உள்ளிட்ட ஆறு அறிவுகளாகக் கொண்டு மகிழலாம். இப்படிக் கொண்டால் அறிவுமயமான அப் பெருமான் சஞானத்தின் திருவுரு" ஆகின்றான். அதாவது யாவற்றையும் உணர்ந்தவன் (Omniscient என்றாகின்றான். ஆறு முகங்களில் ஐந்து முகங்களை மண், காற்று, நீர், தீ, விசும்பு என்ற ஐம்பெரு பூதங்களா கவும் ஆறாவது முகத்தை அவற்றை இயக்கும் பகுத்தறி வாகவும் கொண்டு சிந்திக்கலாம். ஐம்பெரும் பூதங் களின்றி இவ்வுலகில் எப்பொருளும் இல்லையாதலால், அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந் துள்ளான் (Omnire ent) என்ற கருத்துடன் இயை கின்றான். கந்தவேளின் ஆறாவது முகம் பகுத்தறிவு எனக் கொள்ளப்படுவதால் அவனை உலகினை இயக்கும் மாபெரும் ஆற்றலாகக் (Omnipotent) கருதி மகிழலாம். இங்கனம் முருகப் பெருமானின் திருவுரு அவனது முத்கிறப் பண்புகளையும் உணர்த்துவதாகக் கருத இடம் அளிக்கின்றது. முருகப் பெருமான் வானவரின் தானைத் தலைவன்: தேவசேனாபதி. எனவே, பேராற்றல் மிக்குத் திகழ்பவன். இதனை விளக்கும் அவனது பன்னிரு கைகள் குறியீடு களாக அமைகின்றன. கந்தவேளுக்கு உகந்தது கடம்பம் பூ, இதனால் அவன் கடம்பன்' என்ற பெயர் பெறு கின்றான். கார் சாலத்தில் மலரும் கடம்ப மலரை மாலை யாக அணிந்து கடம்ப மரத்தில் உறைவது அவனது அருள் திறத்திற்குக் குறியீடாக அமைகின்றது. அவனது சேவல் கொடி நாத (ஒலி) தத்துவத்திற்கும், மயில் விந்து (ஒளி)