பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் முருகன் 20選 தத்துவத்திற்கும் குறியீடுகளாகும். குன்றம் எறிந்தானின் வேற்படையை எப்படைக்கும் தாயகமாவது” என்பர் கந்தபுராண ஆசிரியர். மயில், வேல் இவற்றின் ஆற்றலைக் கந்தரலங்காரப் பாடல்கள் விளக்குகின்றன. மயிலின் தோகை அசைவால் உண்டாகும் காற்று பட்டதால் மேரு மலையே அசைந்தது; மயில் அடியிட்டு நடக்க மலைகள் துரளாயின; கடல் அத் துாள் நிறைந்து மேலிட்டது (11). சேவல் சிறகடிக்கக் கடல் கிழிந்தது. அண்டகோள ஓடு உடைந்தது; நட்சத்திரங்கள் உதிர்ந்தன. மலைகள் பொடியாயின (12). வேல் பட்டதனால் கிரெளஞ்சம் குலைந்தது; சூரன் சேனை அழிந்தது; இந்திரன் உலகம் பிழைத்தது 113). இன்னும் அது கடலையும் கலக்கி அழித்தது (40). முருகவேளின் மூன்று சக்திகளில் வேல் ஞான சக்தியாகவும், வள்ளியம்மை இச்சா சக்தியாகவும், தெய்வ யானை கிரியா சக்தியாகவும் சொல்லப் படுகின் றனர். இங்ஙனம் முருகனது பெருமையை விவரித்தால் கட்டுரை நீளும்; முடிவில்லாமல் போகும். கடவுக் தனிமா மயிலோய் சரணம் கல்லார் புகழும் வல்லோய் சரணம் திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க் கரியாய் சரணம் சரணம் தடவண் புயனே சரணம் சரணம் தனிமா முதலே சரணம் சரணம் கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்’ என்று அருட்பிரகாச வள்ளலார் வாக்கைக் கொண்டு கந்தவேளின் திருவடிகளில் சரணம் அடைவோம். 6. திருவருட்பா - முதல் திருமுறை - கந்தர் சரணப் உத்து - 5 : ... . . . .