பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(xix) துறையில் பேராசிரியராகப் (1947) புகுந்தார். அங்கும் நேரிய உழைப்பால் முதல்வர், மண்டலக் கல்வி ஆய்வாளர்: துணைக் கல்வி இயக்குநர், இணைக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர், மதுரைக் காமராசர் பல்கல்ைக் கழகத் துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் என்று பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றி அங்கங்கெல்லாம் தம் புகழ் நிறுவியவர். இப்பணிகட்கிடையில் இந்தியப் பல்கலைக் கழகங்களின் சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு சாரண இயக்கத் தலைவராகவும் பணியாற்றினார். தம் பணிக் காலத்தில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகள், உயர் மட்டக் குழுக்கள், பல்கலைக் கழக மானியக்குழு இவற்றில் பங்கு பெற்றவர். பல ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியவர். தம் வாழ்நாளில் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். சொற்கலைச் செல்வர்" (அனைத்திந்திய பல்கலைக் கழக ஆசிரியர் கழகம் வழங்கியது) என்ற விருது மகுடமாகத் திகழ்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலிலும் உரையாற்றுவதில் வல்லவர் என்பதைப பறைசாற்றுகின்றது. தற்சமயம் உயர்நிலைக் கல்விச் சீர்திருத்தக் குழுவின் துணைத்தலைவராக இருந்து வருகின்றார். S. . V. கல்வி அறத்தின் தலைவராகவும் இருந்து பணியாற்றி வருகின்றார். இந்த இனிய அறிஞரை 1975 முதல் நன்கு அறிவேன். நெருங்யகி பழக்கமும் உண்டு. எ ன் னு ைட ய வளர்ச்சியையும் வளமையையும் அவர் நன்கு அறிந்தவர். அடியேனும் அவருடைய பணியையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தவன். அண்டினவர்கட்கெல்லாம் நேர்மை தவறாது உதவுபவர் கண்ணோட்டம் மிக்க சிறந்த பண்பாளர். இவர் என் நூலில் ஏதோ ஒரு வகையில் இடம் பெற வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இந்த நூலை அவருக்கு அன்புப் படையலாக்கிப் பெருமிதம்