பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(xviii) ஆகியவை வெளியிட்டுள்ள கலைக் களஞ்சியங்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை வழங்கியவர், அமெரிக்கா (ஆறு பல்கலைக்கழகங்கள்), இங்கிலாந்து இலண்டன்) இவற்றுடன் தொடர்புள்ளவர். இங்கெல்லாம் ஒப்பிலக்கியம் பற்றி பல விரிவுரைகளை நிகழ்த்தி அறிஞர் களின் பாராட்டைப் பெற்றவர். Indo-US Culturat Exchange Fuíbright Feijowship Programme (1988-89) என்ற அரியதோர் திட்டத்தில் பங்கு பெற்றவர். பொதுவாக மாணவர்களின் நலமே தம் நலமாகக் கொண்டு பணியாற்றுபவர். தாம் வாழ்க்கையில் சந்திக்கும். இக்கட்டுகளையும், தொல்லைகளையும் பொறுமையுடன் தாங்குபவர். எவரையும் குறை கூறாது, பழி சுமத்தாது, அனைத்தும் தம் நுகர்வினையின் விளைவு எனச் சிரித்து மகிழ்டவர். இடுக்கண் வருங்கால் நகுக” என்ற வள்ளுவத்தைக் கடைப்பிடிப்பவர். :பண்புடையார் பட்டுண்டு உலகம்" என்ற வள்ளுவத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர். எதனையும் இறைவன் விட்ட வழியாகக் கொள்பவர், இவற்றால் பல நன்மாணாக்கர் களின் வீர வழிபாட்டிற்கு உரியவராகத் திகழ்வதில் வியப்பொன்றும் இல்லை. இத்தகைய நல்லுள்ளம் படைத்த நண்பரின் அணிந்துரை பெற்றது இந்நூலின் பேறு அடியேனின் பேறுமாகும் இதனை வழங்கிய என் சோதரருக்கு என் உளங் கணிந்த நன்றி என்றும் உரியது. பேராசியர் டாக்டர் சை. வே. சிட்டிபாபு அவர்கள் (பிறப்பு 7-11-1920) பள்ளி, கல்லூரிகளில் நற்கல்வி பெற்று, சிறந்த முறைகளில் தே ர் ச் சி ய ைட ந் து முன்னணியில் நின்றவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியேற்று {194} தம்முடைய கடுமையான உழைப்பாலும் தேர்மையான பணியாலும் நல்லோர் பலருடைய கவனத்தைக் கவர்ந்தவர். இதன் பயனாக அரசுக் கல்வித்