பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(xvii) கொண்டு அதனை முறையாகக் கற்றுப் புலமை எய்தினோம். எம்போன்ற தெலுங்கர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு பெரிது; மிகப் பெரிது. இப்பெருமகனாரின் தனிச் சிறப்பு தமிழ் எம். ஏ., பண்டிதம், வித்துவான் முதலிய தமிழ்ப் பட்டங்களைப் பெற்றதுடன், எம். ஏ, (ஆங்கிலம்), விசாரத் (இந்தி), மொழியியல் பட்டங்களையும் பெற்றுத் திகழ்கின்றவர். சரளமாக ஆங்கிலத்தைப் பேச்சிலும் எழுத்திலும் கையாளும் தனித்தமிழ்ப் பேராசிரியர். பிறமொழிகளின் மீது அன்பு கொண்டவர்; காழ்ப்பில்லாதவர். தமிழ் மொழியின்மீது ஆராக் காதலுடன் அதனைப் போற்றி வளர்ப்பவர்; மொழி வெறியர் அல்லர். இந்த உயர் பண்புகளை இவரிடம் பழகுவோர் நன்கு அறிவர்; இவர்தம் எம். ஏ. மாணவர்கள், ஆய்வு ம ன வ ர் க ள் பறைசாற்றுவதன்மூலம் இவற்றை அறிய்லாம். பல மட்டங்களில் உயர்நிலைப் பள்ளி உட்பட கற்பிக்கும் வாய்ப்புகள் பெற்றவராதலால் மாணவர்களின் இதயப் பாங்கை நன்கு அறிந்தவர். ஆய்வில் கண்டிப்பானவர்; ஆய்வு மாணவர்களிடம் கடுமையான உழைப்பை எதிர் பார்ப்பவர்; வற்புறுத்தி உழைக்கச் செய்பவர். ஆய்வு மாணவர் படிக்கும்போது சிறிது முணுமுணுத்தாலும், படிப்பை முடித்து வெளியேறியபின் இவர்தம் பெருமையைப் போற்றுவதை அறிவேன். சற்றேறக் குறைய நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவர்வழி நின்று எம்.ஃபில் பி எச். டி. பட்டம் பெற்றவர்கள். இலக்கியத் திறனாய்வு, இலக்கியக் கொள்கைகள், ஒப்பிலக்கியம், மொழி பெயர்ப்பு, அகராதித்துறை இவற்றில் நாட்டம் கொண்டு உழைத்துத் நனித்திறமை யுடன் திகழ்பவர். ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் அறுபதிற்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் எழுதி வெளியிட்டுப் பெருமை பெற்றவர்; தமிழ்ப் பல்கலைக் கழகம், சாகித்திய அகாடமி ஆசிய ஆய்வுக் கழகம் iļ