பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(xvi) மிக்க இவர் பட்டி மண்டபம், வழக்காடு மன்றம், சிந்தனை மேட்ை, கருத்தரங்கு முதலிய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு கேட்போர் அனைவரையும் மகிழ்விப்பவர். என்பால் அளவற்ற அன்பு கொண்டவர். எழுத்தாற்றல் மிக்க இப்பெருமகனார் ஆனந்த விகடன், கல்கி போன்ற தமிழக முன்னணி இதழ்களிலும், தமிழ்நேசன், மலைமகள் முதலிய அயல் நாட்டு இதழ்களிலும், பல நினைவு மலர்களிலும் நவீன முறையில் தம் எழுத்தோவியங்களை வெளியிட்டு வாசகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டவர். பல்லாண்டுகளாக து குமர குருபரர்' என்ற திங்கள் இதழ்களின் ஆசிரிய ராகப் பணிபுரிபவர். இதுதான் உலகம், நீதித் தெளிவு” முதலிய 27 கவிதை நூல்களையும் யாப்பருங் கலக் காரிகை முதலிய நான்கு உரை நூல்களையும், வெளி யிட்டவர். திருச்சி, கோவை, சென்னை, பாண்டி ஆகிய வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர். இத்தகைய வல்லவர்-நல்லவர்-இந்நூலுக்கு சிறப்புப் பாயிரப் பாமாலை, வழங்கிச் சிறப்பித்தது இந்நூலின் பேறு; என் பேறுமாகும். இந்த இனியவருக்கு என் இதயம் கனிந்த நன்றி உரித்தாகின்றது. இந்த நூலுக்கு அரியதோர் அணிந்துரை நல்க ஒப்புக் கொண்டவர் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைப் பேராசிரியர் டாக்டர் அ. அ. மணவாளன் அவர்கள். கருவிலே திருவுடைய இப்பெரு மகனார் வழிவழி வைணவக் குடும்பத்தைச் சார்ந்தவர். என் உடன் பிறவாச் சோதரர் போன்றவர். ச த் து வ கு ண ம் மிக்க இப்பெருமகனர், அடியேனைப் போலத் தெலுங்கைத்தாய் மொழியாக்க கொண்டு வீட்டில் தெலுங்கு பேசுபவர். எங்கட்குத் தெலுங்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் நினைப்பிற் கெட்டாத நெடுங்காலமாகத் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்களாதலின் தமிழையே தாய்மொழியாகக்