பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{XV} இந்தத் தொகுப்பு நூலை அன்புடன் ஏற்று வெளியிட முன் வந்தவர் சென்னை உமா பதிப்பக (58, ஐயப்பசெட்டி தெரு, மண்ணடி, சென்னை-600 001) உரிமையாளர் திரு. இராம இலட்சுமணன் அவர்கள். இதனைச் சிறந்த முறையில் அச்சிட்டு உதவியவர் சரவணா வண்ண அச்சக (19, பார்த்தசாரதி நாயுடு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-;) உரிமையாளர் அவர்கள், இவர்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. இந்த நூலுக்குச் சிறப்புப் பாயிரம் பாமாலை வழங்கிச் சிறப்பித்தவர் என் நெடுநாள் நண்பர் திரு. K.M. வேங்கடராமய்யாவின் அருமைப் புதல்வர் டேராசிரியர் டாக்டர் மன. வே. பசுபதியவர்கள் தற்சமயம் திருப்பனந்தாள் ஆதினம் கலைக் கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வ ராகவும் பணியாற்றி வருபவர், நினைப்பிற்கெட்டாத நெடுங்காலமாகத் தமிழகத்தைத் தம் பிறப்பிடமாகக் கொண்டவராதலாலும் தமிழ்மொழி, இலக்கியங்களை ஆர்வமாக ஆழ்ந்து கற்றவராதலாலும் இந்தத் தெலுங்குச் சான்றோர் தமிழ்ப் புலமை மிக்கவராகத் திகழ்பவர். வித்துவான், பண்டிதம் (புலவர்), எம். ஏ., முதலிய பல பட்டங்களையும், வித்யா ரத்னம், தமிழருவி முதலிய பல விருதுகளையும் பெற்றுத் திகழ்பவர். அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற பொன்மொழியை உணர்ந்த வராதலால் அடக்கத்தை அணிகலனாகக் கொண்டவர். எவருடனும் இன்முகத்துடன் உரையாடி மகிழ்விப்பவர். *பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்ற வாய்மொழிக்கு இலக்கியமாகத் திகழ்பவர். - - வளம் மிக்க கவிதை படைக்கும் இச்சான்றோர் உலகத் தமிழ் மாநாட்டுக் கவியரங்கு உட்பட 500க்கு மேற் பட்ட கவியரங்குகளில் பங்கு கொண்டு வளம் மிக்க தம் கவிதைகளால் கேட்போர் அனைவரையும் கவிதை யநுபவத்தில் ஆழங்கால்படச் செய்பவர். பேச்சாற்றல்