பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் தோற்றேன் பல்பிறவி, துன்னைக் காண்பதோ ராசையினால் ஏற்றேன்; இப்பிறப்பே இடருற்றனன்-எம்பெருமான்! கோற்றேன் பாய்ந்தொழுகும் குளிர் சோலைசூழ் வேங்கடவா!ஆற்றேன், வந்தடைந்தேன்; அடியேனையாட் கொண்டருளே --திருமங்கையாழ்வார் திருப்பதிப் பல்கலைக் கழகத்திலிருந்து ஒய்வு பெற்றுச் (அக்டோபர் 24, 1977) சென்னையில் குடியேறின. பின் "வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும், பூசித்தும் போக்கினேன் போது' என்ற பக்திசாரர் வாக்குப்படி இலக்கியங்களைப் படித்தல், சிந்தித்தல் அநுபவத்தல் என்ற பயனுடைய பாங்கில் காலங்கழித்த போது பல்வேறு இடங்களில் (வானொலி உட்பட) உரையாற்றவும், சில நண்பர்களின் மணிவிழா மலர்கள், பெரியோர் களின் நூற்றாண்டு விழா நினைவு மலர்கள் சில இதழ்களின் சிறப்பு மலர்கள் ஆகியவற்றில் கட்டுரைகள் வரையவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அந்த உரைகள், கட்டுரைகளின் தொகுப்பே இந்த இனிய நூலாக வடிவம் பெறுகின்றது.* பெரி திரு. 1.9: 8 நான், திருவந் : 63 இவற்றின் விவரம் அந்தந்தக் கட்டுரைகளின்கீழ் அடிக்குறிப்பாகக் காட்டப் பெற்றுள்ளது.