பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 易每荔 இவற்றுள் 14, 15, 16 எண்ணுள்ளவை முறையே முதலாழ் வார்களான பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகியோராலும்; 17 எண்ணுள்ளது திருமழிசைபிரானா லும், 18, 19, 20 எண்ணுள்ளவை நம்மாழ்வாராலும்; 21, 22, 23 எண்ணுள்ளவை திருமங்கையாழ்வாராலும் அருளிச் செய்யப் பெற்றவை. தொகுதி பற்றிய குறிப்புகள் ; இத் தொகுதிபற்றிய சில குறிப்புகள் கவனிக்கத் தக்கவை. (1) முதலாயிரம், பெரியதிருமொழி, திருவாய்மொழி, இயற்பா என்ற பாகுபாடும், பிரபந்தங்களின் அமைப்பு முறையும், நாதமுனிகள் காலத்தில் ஏற்பட்டவை. பிரபந் தங்களின் எண்ணிக்கை இத்தனை என்பது நாதமுனிகள் காலத்தில் வழங்கி வந்ததாகத் தெரியவில்லை. (2) திருவரங்கத்தமுதனார் இராமாநுசர்மீது அருளி யுள்ள இராமாநுச நூற்றந்தாதி இராமாநுசர் காலத்தில் இயற்பாத் தொகுதியுடன் 24-வது பிரபந்தமாகச் சேர்க்கப் பெற்றது என்பதைக் கோயிலொழுகு' என்ற நூலின் வாயிலாக அறிகின்றோம். அக் காலத்திலிருந்து முதலா பிரத்தில் கண்ணி துண் சிறுத்தாம்யைப்போல் இயற்பா இறுதியில் இராமாதுச நூற்றந்தாதி எங்கணும் பெரு வழக்காக ஒதப்படுவதாயிற்று. இன்றும் அவ்வழக்கு நடை முறையில் உள்ளது. திருக்கோயில்களில் இயற்பாவின் இறுதியில் இப்பிரபந்தத்தை அநுசந்தித்து வருகின்றனர். இதனால் இந்நூற்றந்தாதி இயற்பாப் பிரபந்தங்களுள் ஒன்றாக அமைந்து விட்டமை புலனாகும். (8) திவ்வியப் பிரபந்தங்களின் எண்ணிக் கையும் பாசுரங்களின் எண்ணிக்கையும் வேதாந்த தேசிகர் காலத் தில் வரையறுக்கப் பெற்றுவிட்டன (பிரபந்த சாரம்). தேசிகர் திருப்பல்லாண்டைத் தனிப்பிரபந்தமாகக் கொள்ளவில்லை.அது பெரியாழ்வாரின் திருமொழியுடன் சேர்ந்தது என்ற சம்பிரதாயத்தைஅப்படியே கொண்டவர்.