பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2豹6 வாய்மொழியும் வாசகமும் (4) தென்கலையார் திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கொண்டு இராமாதுச நூற்றந்தாதியைத் தவிர்த்து நாலாயிரம் 24 பிரபந்தங்கள் அடங்கியது என்ற கொள்கையினர்: வடகலையார் திருப்பல்லாண்டைத் தனிப்பிரபந்தமாகக் கொள்ளாமல் இராமாதுச நூற்றந்தா தியைச் சேர்த்து 24 பிரபந்தமாகக் கணக்கிட்டுக் கொள்பவர். . பாசுரத் தொகை : வடகலையாரும் தென்கலையாகும். வெவ்வேறு முறையில் கணக்கிட்டு பாசுரத் தொகையை 4000 என்பதாக வரையறுப்பர். (அ) தென்கலையார் : இராமாதுக நூற்றந்தாதியை கணக்கிடாமல் இரண்டு மடல்களையும் கண்ணிகளாகக் தனத்திட்டு 947 + 11344-1102+593= 3776 ஆகின்றன. இருமடல்களையும் நீக்கினால் 3774 ஆகின்றது. பெரிய திருமடலை 148க் கண்ணிகளாகவும், சிறிய திரு மடலை 77; கண்ணிகளாகவம் கணக்கிட்டு 226 பாசுரங் களாகக் காட்டுவர். இவர்கள் 3774+226 = 4000 என்று கணக்கிடுவர். - (ஆ) வடகலையார் : இராமாதுச நூற்றந்தாதியைக் கணக்கிற்கு எடுத்துக்கொண்டு சிறிய திருமடலை 38 துண்டுகளாகவும் (நிறுத்துமிடங்களை அடிப்படையாகக் கொண்டு) பெரிய திருமடலை 8.0 துண்டுகளாகவும். கணக்கிட்டு 118 பாசுரங்களாகக் கணக்கிடுவர். இவர்கள் 3774 டி 108 - 118=4000 என்று கணக்கிடுவர். முடிவு : இருவர் கருத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்க தன்று. இரு மடல்களும் கலிவெண்பாவாலான தனித்தனி யாக இரு பாடல்களே. பாடல்களைச் சிதைத்து விருப்பப் படித் துண்டுகளாக்கி துண்டுகளைப் பாடல்களாகக் கொள்வது இலக்கணமரபன்று. 4000 க்குச் சில பாடல்க்ள் குறைவாக இருப்பினினும் 4000 என்று கொள்வது தவறாகாது. எ-டு 1102 பாடல்களைக் கொண்ட திருவாய்