பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 207 மொழி ஆயிரம் என்றும், 1984 பாடல்களைக் கொண்ட பெரிய திருமொழியை ஆயிரம் என்றும், 108 பாடல்களை கொண்ட பிரபந்தத்தை இராமாதுசநூற்றந்தாதி என்றும் சொல்லுவதைப் போல. இன்னொரு கருத்து : திருமங்கையாழ்வார் அருளி யுள்ள இருமடல்களை வடகலையார் சரமப் பிரபந்தங்கள் என்பர். தென்கலையார் அந்த ஆழ்வார் அருளியுள்ள திருநெடுந் தாண்டகத்தைச் சரமப் பிரபந்தம் என்று கூறுவர். பக்தியுடன் சேவித்தால் இரண்டு தரப்பினரும் கூறுவது பொருத்தமாகத் தோன்றும், சமயக் கருத்துகள் : நாலாயிரத்தைப் பக்தியுடன் சேவித்தால் திருமந்திரம், துவயம் சரமசுலோகம், அர்த்த பஞ்சகம் சித்து, அசித்து, ஈசுவரன் போன்ற தத்துவ ஒளியைக்கண்டு அநுபவிக்கலாம். இராமாநுச நூற்றந் தாதியைப் பிரபந்ந காயத்திரி என்று சொல்லும் உண்மையையும் உணரலாம். இந்தச் செய்யதமிழ்மாலை களைத் தெளிய ஒதித் தெளியாத மறைநிலங்களையும் கண்டு தெளியலாம்.