பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சமயமும் அறிவியலும் சமயம் என்பது இன்று, நேற்று தோன்றியதல்ல. நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாகவே அது நிலவி வருகின்றது; உலவி வருகின்றது என்றும் சொல்லலாம். சமயத்தையும் மனிதனையும் தனித்தனியே பிரித்தற்கிய லாது. மக்களும் சமயத்தை விட்டுத் தனித்து வாழ இயலாத நிலையிலுள்ளனர். பகலவனையும் கதிர்களையும் தனித் தனியாகப் பிரித்தற்கியலுமா? இயலாது. அது போன்ற நிலைத்தான் இங்கும். சமயம் மக்களின் உயிரோ டும் உடலோடும் ஒன்றி நிற்கின்றது. நம்மாழ்வார் இறைவனைப்பற்றிக் கூறும்போது உடல்மிசை உயிரெனக் சந்தோங்கும் பரந்துளன் (திருவாய். 1.1:7) என்றும் :ப ந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் (டிெ 1.1:10) என்றும் கூறுவார். இறைவனின் இருப்பைக் கூறும் கம்பநாடன் பிரகலாதன் வாய்மொழியாக, சாணியிலும் உளன் ஓர் தண்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணிலும் உளன்மா மேருக் குன்றினும் உளன் இக் கின்ற தூணிலும் உளன்ரீ சொன்ன சொல்லினும் உளன் -இரணியன்வதை 124 1. தமிழ்ப் பல்கலைக் கழகம் - காஞ்சி தத்துமையத்தின் ஆதரவில் மாதாந்திரச் சொற்பொழிவாக 15-10-99 அன்று பச்சையப்பன் மேனிலைப் பள்ளிக் கருத்தரங்குக்கூடத்தில் நடைபெற்ற சொற்பொழிவு. வா. வா,-1