பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வாய்மொழியும் வாசகமும் என்று பாடலிட்டுக் காட்டுவான். அந்த இறைநிலை யைப் போன்றது மக்களோடு சமயம் ஒட்டி உறையும் அன்றாடக்கடன்கள் : மக்கள் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளில் கூட சமயம் தலை காட்டுகின்றது. கூழானாலும் குளித்துக்குடி கந்தையானாலும் கசக்கிக் கட்டு ஆலயம் தொழுவது சாலவும் நன்று நோன்பு என்பது கொன்று தின்னாமை என்பன போன்ற முதுமொழிகளைச் சிந்தித்தால் சமயம் அறிவியலோடு தொடர்பு கொண்டுள்ளதை அறியலாம். காலைக் கடன் களைக் கழித்து, நீராடிய பிறகு நம் உடல் உள்ளும் புறம்பும் ஓரளவு தூய்மையாகின்றது. இதனை நாம் அநுபவத்தில் உணர்கின்றோம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது திருக்கோயிலுக்கு நடந்து செல் அம்போது ஒரளவு உடற்பயிற்சி நம்மை அறியாமல் நடை பெறுகின்றது. தெய்வசிந்தனையுடன் அருட் செல்வர் களின் பாடல்களை நாவினால் நவிற்றிக் கொண்டு செல்லும்போது மனம் தூய்மையடைகின்றது; மனத்தின் கண் படிந்துள்ள மாசு நீங்குகின்றது. மனத்துக்கண் மாசிவன் ஆதல் அனைத்து அறன் (குறள்.34) என்பது வள்ளுவன் வாய்மொழி. நோன்பு என்பது கொன்று தின்னாமை என்பது சமண சமய நெறி. கொல்லாமை' என்ற இந்நெறியைச் சைவசமய நெறியாகவும் கொள்ள லாம்: வைணவ நெறியாகவும் ஏற்கலாம். வைணவ அடியார்களில் ஒருவனாகிய பெரிய திருவடி புலால் உண்ப வன்; சிறிய திருவடி மரக்கறியை மட்டிலுமே உண்பவன். இதுபற்றியே வைணவர்களில் சிலர் இவர்களைப் பின் பற்றுகின்றார்களோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. சைவர்களில் சிலர் புலால் உண்டு சிவநெறியையே குலைப்பது எனக்கு வியப்பினைத் தருகின்றது. - சமயமும் அறிவியலும் இந்த நிலையில் சமயத் தையும் அறிவியலையும் பற்றிச் சிந்திக்கின்றோம்,